Home /News /automobile /

டாடா நிறுவனத்தின் கார்களின் விலை உயர்வு.. காரணம் இது தான்!

டாடா நிறுவனத்தின் கார்களின் விலை உயர்வு.. காரணம் இது தான்!

டாடா மோட்டர்ஸ்

டாடா மோட்டர்ஸ்

கடந்த ஜனவரி மாதத்தில் டாடா நிறுவன கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஆட்டோ மொபைல் தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கும் டாடா நிறுவனம், தனது பாசஞ்சர் வாகனங்களுக்கான விலையை கடந்த சனிக்கிழமை 1.1 வரை சதவீதம் உயர்த்தியது. தனி கார்களின் மாடல் மற்றும் வேரியண்ட்களை பொருத்து இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து டாடா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கார் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கார்களின் விலை அதிகரிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு ஏப்ரல் 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக விலையேற்றம்

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் டாடா நிறுவன கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அந்த சமயத்திலும், மூலப் பொருள் விலை உயர்வு காரணமாகவே கார்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, கமர்ஷியல் வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தும் நடவடிக்கையை டாடா நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் மேற்கொண்டது.

விற்பனையில் முதன்மையான இடம்…

அதிகரித்து வரும் வாகன விலை, கொரோனா பெருந்தொற்று காலம் ஆகியவற்றுக்கு மத்தியிலும், கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பாசஞ்சர் வாகனங்களை அதிகம் விற்பனை செய்திருக்கும் முதன்மையான நிறுவனங்களின் பட்டியலில் டாடா நிறுவனம் இடம்பெற்றுள்ளது.



also read : கடந்த நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மும்மடங்கு அதிகரிப்பு..

முதல் எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை, நெக்ஸான் இவி என்ற பெயரில் டாடா நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் நடுத்தர அளவில் மற்றொரு இவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பெயர் டிகோர் இவி ஆகும்.

டாடா நிறுவனத்தின் தற்போதைய கார்கள்:

உள்நாட்டு தயாரிப்பு நிறுவனமான, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 7 ஐசிஇ கார்கள் உள்ளன. டிகோர், அல்ட்ராஸ், பஞ்ச், நெக்ஸான், ஹேரியர், சஃபாரி ஆகிய பெயர்களில் தற்போது கார்கள் விற்பனை ஆகி வருகின்றன. இது தவிர நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய மாடல்களும் உள்ளன.



also read : டாடா கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சலுகை?

ஏப்ரல் 2ம் தேதி புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்:

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு காரணமாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஏப்ரல் 29ஆம் தேதி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, அவர்கள் முன்னிலையில் அந்தக் காரை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தக் கார் தொடர்பான ப்ரிவூயூ வீடியோ ஒன்றை டாடா நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்த போதிலும், அதுகுறித்த விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Tata motors

அடுத்த செய்தி