டாடா கார்களை வாங்க விரும்புகிறீர்களா? காத்திருக்கிறது ₹1.5 லட்சம் கேஷ்பேக்!

டாடா ஹேரியர்

இந்தியாவில் டாடா ஹேரியர் 13.02 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், டாடா ஹெக்சாவின் விலை 13.26 லட்சம் ரூபாய் ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விழாக்கால சிறப்புச் சலுகையாக டாடா நிறுவனத்தின் குறிப்பிட்ட சில கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஏற்கெனவே பல விலைத்தள்ளுபடிகளை சமீபத்தில்தான் அறிவித்தது. இதையடுத்து தற்போய்து டாடா ஹேரியர் கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் டாடா ஹெக்சா கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் இந்த கார்களை ஆர்டர் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வரையில் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.

இந்த கேஷ்பேக் ஆஃபர் மூலம் ஹெக்சாவின் விலை 1.80 லட்சம் ரூபாய் வரையிலும் ஹேரியர் விலை 80 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைகிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் 13.02 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், டாடா ஹெக்சாவின் விலை 13.26 லட்சம் ரூபாய் ஆகும்.

விழாக்கால சலுகை என்பதால் கூடுதலாக உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. டாடா ஹேரியர் இந்த ஆண்டு ஜனவரியில்தான் வெளியானது என்பதால் ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா XUV500, ஜீப் காம்பஸ், கியா செல்டாஸ் மற்றும் MG ஹெக்டார் ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாகவே உள்ளது.

மேலும் பார்க்க: Ferrari அறிமுகம் செய்யும் முதல் எஸ்யூவி - உலகின் அதிவேக கார் என அங்கீகாரம்

சாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா ?
Published by:Rahini M
First published: