ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பல்வேறு அம்சங்களுடன் Tata Altroz XM+ வேரியண்ட் ரூ.6.60 லட்சம் விலையில் அறிமுகம்

பல்வேறு அம்சங்களுடன் Tata Altroz XM+ வேரியண்ட் ரூ.6.60 லட்சம் விலையில் அறிமுகம்

டாடா அல்ட்ரோஸ். (புகைப்படம்: டாடா மோட்டார்ஸ்)

டாடா அல்ட்ரோஸ். (புகைப்படம்: டாடா மோட்டார்ஸ்)

ஜனவரி 2020ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் Altroz உடன் நுழைந்தது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் முழு 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றதால், அதன் வடிவமைப்பு, வாகனத்தை இயக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காகவும் இது அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் உலகளாவிய NCAP யிலிருந்து வயது வந்தோர் பாதுகாப்பு மதிப்பீட்டிற்க்காகவும் இந்த தயாரிப்பு வாடிக்கையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :

Tata Motors தனது பிரீமியம் ஹேட்ச்பேக்கின் XM+ வேரியண்ட்டை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. Tata Altroz பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கும் மாடல் ரூ. 6.60 லட்சத்திற்கு(டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கிறது. Tata Altroz XM+ வேரியண்ட்டில் Apple Car Play உடன் 7 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் Android Auto கனக்ட்டிவிட்டி சப்போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இதில் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், குரல் அலர்ட் , குரல் கட்டளை அங்கீகாரம், ஸ்டைலான வீல் கவர்களுடன் கூடிய 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. Tata Altrozன் XM+,  High Street Gold, Downtown Red, Avenue White, மற்றும் Midtown Grey ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. XM+ டிரிம்மில் சேர்க்கப்பட்ட  அம்சங்கள் அனைத்தும் XM டிரிம்-லெவலை விட ரூ. 30,000 க்கு கிடைக்கின்றன. இந்த வாகனம் 113Nm டார்க்கை உற்பத்தி செய்யும் அல்லது 1.5 லிட்டர், டர்போ-டீசல் 90hp மற்றும் 200Nm டார்க்கை வெளியேற்றும். 

இரண்டு என்ஜின் விருப்பங்களும் தற்போது 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகின்றன. Altroz XM+ trim தற்போது பெட்ரோல் எஞ்சின் விருப்பத்துடன் மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், Altrozன் வெற்றியின் பின்னணியில் இந்த அறிவிப்பு வருகிறது. இந்த மாறுபாட்டின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது பிரீமியம் வகைகளில் மட்டுமே கிடைக்கும் அம்சங்களை, கவர்ச்சிகரமான மற்றும் அணுகக்கூடிய விலையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இதுகுறித்து Tata Motors நிறுவனத்தின் பயணிகள் வாகன வர்த்தக பிரிவின் (PVBU) சந்தைப்படுத்தல் தலைவர் விவேக் ஸ்ரீவத்ஸா கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய மற்றும் உற்சாகமான தயாரிப்புகளை கொண்டு வருவதற்கான வேகத்தை பராமரிப்பதில் எங்கள் புதிய தயாரிப்பான Altrozன் XM+ ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். 

மேலும் Altroz உடன் நாங்கள் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் தொழில்துறையில் பாதுகாப்பிற்கான புதிய அளவுகோலையும் உருவாக்கியுள்ளோம். XM+ வேரியண்டின் அறிமுகம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விலையில் பலவிதமான பிரீமியம் அம்சங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் Altrozன் வாடிக்கையாளர்களிடம் மேலும் நன்மதிப்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார். 

Also read... ராயல் என்ஃபீல்டின் Meteor 350 விற்பனை தொடங்கியது - விலை குறித்த விவரங்கள்!

ஜனவரி 2020ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் Altroz உடன் நுழைந்தது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் முழு 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றதால், அதன் வடிவமைப்பு, வாகனத்தை இயக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காகவும் இது அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் உலகளாவிய NCAP யிலிருந்து வயது வந்தோர் பாதுகாப்பு மதிப்பீட்டிற்க்காகவும் இந்த தயாரிப்பு வாடிக்கையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. 

Altroz, Tata Motorன் இம்பாக்ட் டிசைன் 2.0 தத்துவத்தை கொண்டுள்ளது மற்றும் இது நிறுவனத்தின் ALFA கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் வாகனம் ஆகும். பிரீமியம் ஹேட்ச்பேக் IPL 2020ன் அதிகாரப்பூர்வ கூட்டாகவும் இது உள்ளது. மேலும் இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் பல  இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile, TATA