• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • டாடா தயாரிப்புகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் இது தான் - Tata Altroz iTurbo கார் அறிமுகம்!

டாடா தயாரிப்புகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் இது தான் - Tata Altroz iTurbo கார் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹூண்டாய் ஐ20 மாடல்களுக்கு சவால்விடுக்கும் வகையில் அறிமுகமானது புதிய Tata Altroz iTurbo கார்!

  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Altroz காரின் iTurbo வேரியண்ட்டை வரும் ஜனவரி 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. கனெக்டட் தொழில்நுட்பம், புதிய வண்ணம், புதிய பவர்ஃபுல் எஞ்சின் என இதில் அடங்கியுள்ள சிறப்புகள் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் மாருதி சுசுகி, ஃபோக்ஸ்வேகன், ஹூண்டாய், ஹோண்டா மற்றும் டொயோட்டா நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரியில் புத்தம் புதிய Altroz காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

ALFA ஆர்கிடெக்சர் மற்றும் Impact 2.0 டிசைன் லேங்குவேஜ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் Altroz, சர்வதேச நிறுவனமான Global NCAP-ன் பாதுகாப்புக்கான குறியீட்டில் 5 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுள்ளது.இக்காரின் டர்போ வேரியண்ட் எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் எனவும் அதன் பின்னர் டெலிவரி துவங்கும் எனவும் ரூ.11,000 முன்பனமாக செலுத்தி இக்காரை ஆன்லைனிலும், டீலர்ஷிப்புகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tata Altroz iTurbo காரில் புதிய 1.2 லிட்டர் i-டர்போ சார்ஜூடு இஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 110 hp பவரையும், 140 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை 11.9 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடுகிறது இக்கார். இதுவே டாடா நிறுவனத்தின் அதிவேக பிரீமியம் ஹேட்ச்பேக் கார் என கூறப்படுகிறது. அதிக பவரை வெளிப்படுத்தினாலும் கூட இக்கார் லிட்டருக்கு 18.13 கிமீ மைலேஜ் தரும் என அந்நிறுவனம் கூறுகிறது,மேலும் இக்கார் தனித்துவமான ‘Harbour Blue' வண்ணத்திலும் பிற வண்ணங்களிலும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புஷ் ஸ்டார்ட் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது.

இதில் லெதர் வேலைபாடுகளால் ஆன சீட்கள், கருப்பு மற்றும் கிரே நிறத்திலான டூயல் டோன் இண்டீரியர், முன்பை விட கூடுதல் வேகத்தில் குளிர்ச்சியை அளிக்கும் Xpress ஏசி உள்ளிட்டவற்றுடன் மிக முக்கியமான IRA எனப்படும் கனெக்டட் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

ரிமோட் அன்லாக் வசதி, ஜியோ ஃபென்சிங், இந்தி, ஆங்கிலத்தில் 70க்கும் மேற்பட்ட குரல் கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ளும் திறன், வாகனத்தின் திறன் அறிந்துகொள்தல் என என்னற்ற விஷயங்களை கனெக்டட் தொழில்நுட்பம் மூலம் பெற முடியும்.தற்போது இதன் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் எக்ஸ்ஷோரும் அடிப்படையில் 8 லட்ச ரூபாய் என்ற நிலையில் இருந்து இதன் விலை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. XT, XZ மற்றும் XZ+ t என 3 வேரியண்ட்களில் இக்கார் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: