Home /News /automobile /

டாடா அல்ட்ரோஸ் டார்க் எடிசன் அறிமுகம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்+ வகைகளில் கிடைக்கும் - ஆரம்ப விலை இதுதான்

டாடா அல்ட்ரோஸ் டார்க் எடிசன் அறிமுகம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்+ வகைகளில் கிடைக்கும் - ஆரம்ப விலை இதுதான்

டாடா அல்ட்ரோஸ் டார்க் எடிசன்

டாடா அல்ட்ரோஸ் டார்க் எடிசன்

Tata Altroz Dark Edition : டாடா நிறுவனத்தின் சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு துணை தலைவர் ராஜன் அம்பா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அல்ட்ரோஸ் ப்ரீமியம் வகை கார்களை வெளியிடப்பட்டதன் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களை டாடா நிறுவனம் நடத்தி வருகிறது. இதையடுத்து, அல்ட்ரோஸ் டார்க் எடிசனில் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்.இசட்+ வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அல்ட்ரோஸ் ப்ரீமியம் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கு, வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆதரவை வழங்கினர். மேலும், இதற்கு அடுத்த மாடல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது எக்ஸ்டி மற்றும் எக்ஸ்.இசட்+ ஆகிய வேரியண்ட் கார்களை வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கிறது என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப விலை ரூ.7.96 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

டாடா அல்ட்ரோஸ் மொத்தம் 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல், 1.2 லிட்டர் ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய ஆப்சன்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : ஓப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி...!

இதுகுறித்து டாடா நிறுவனத்தின் சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு துணை தலைவர் ராஜன் அம்பா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “அல்ட்ராஸ் வகை கார்கள், மகிழ்ச்சி நிரம்பிய 1.2 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பிரிவு கார்களில், அல்ட்ரோஸ் 20 சதவீத சந்தை மதிப்பை கொண்டுள்ளது.



இந்த புராடக்ட் உடைய இரண்டாம் ஆண்டை நாங்கள் இரண்டு பிராண்டுகளை அறிமுகம் செய்வதன் வாயிலாக கொண்டாட இருக்கிறோம். இந்திய வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் மற்றும் ஒரே ஆண்டில் மார்க்கெட் வேல்யூ உயர்வு போன்ற வெற்றிகளைக் கண்டுள்ள நிலையில், அடுத்து வரக் கூடிய ஆண்டுகளிலும் அல்ட்ரோஸ் மிகப் பெரிய வெற்றிகளை குவிக்கும் என நம்புகிறோம்’’ என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : ஐபோன் & விண்டோஸ் யூஸர்களுக்காக இந்த டிசைன் மாற்றங்களை டெஸ்ட்டிங் செய்யும் WhatsApp!

அல்ட்ராஸ் டார்க் எடிசன் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்.இசட்+ வேரியண்ட்களில் கருப்பு லெதர் சீட்கள் மற்றும் அனைத்து இண்டீரியர்களும் கருப்பு நிறத்திலேயே அமைந்துள்ளன. ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட், முன்பக்கம் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சீட் பெல்ட்கள், லெதர் வைத்து சுற்றப்பட்ட ஸ்டியரிங் மற்றும் லெதர் போர்த்தப்பட்ட கியர் நாப் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



இது எல்லாவற்றுக்கும் மேலாக, மற்ற அல்ட்ரோஸ் மாடல்களில் இல்லாத அளவுக்கு எக்ஸ்.இசட்+ வேரியண்ட் மாடலில் மட்டும் பிரேக் ஸ்வே கண்ட்ரோல், டயர் பிரசர் மானிடரிங் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டார்க் எடிசன் என்ற பெயருக்கு ஏற்றார்போல முழுமையாக கருப்பு நிறத்திலேயே இருக்கக் கூடிய இந்தக் கார், கருப்பு நிறத்தை பெரிதும் விரும்பும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car, TATA

அடுத்த செய்தி