• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அறிமுகமான 20 மாதங்களுக்குள் 1 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை கடந்த டாடா ஆல்ட்ரோஸ்!

அறிமுகமான 20 மாதங்களுக்குள் 1 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை கடந்த டாடா ஆல்ட்ரோஸ்!

டாடா ஆல்ட்ரோஸ்

டாடா ஆல்ட்ரோஸ்

கடந்த மார்ச்சில் மட்டும் இந்திய வாகன சந்தையில் சுமார் 7,550 ஆல்ட்ரோஸ் கார்களை விற்றது டாடா மோட்டார்ஸ். இதன் மூலம் FY22-க்கான பிரீமியம் ஹேட்ச்பேக் இடத்தில் ஆல்ட்ரோஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா ஆல்ட்ரோஸின் 1,00,000-வது யூனிட்டை வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரியில் ஒரு பெரிய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் கார், லாஞ்ச் ஆன 2 வருடங்களுக்குள் 1 லட்சம் யூனிட் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் தனது ஆல்ட்ரோஸின் 1 லட்சமாவது யூனிட்டை புனேயில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டு உள்ளது.

5 ஸ்டார் உலகளாவிய NCAP பாதுகாப்பு மதிப்பீடு கொண்ட இந்தியாவின் ஒரே ஹேட்ச்பேக் காராக உள்ள டாடா ஆல்ட்ரோஸ், கடும் கோவிட் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 மாதங்களுக்குள் இந்த சாதனையை செய்து இருக்கிறது. இதிலிருந்து டாடா மோட்டார்ஸ் நவம்பர் 2019 முதல் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 150 யூனிட் ஆல்ட்ரோஸை உற்பத்தி செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஆல்ட்ரோஸ் மாதாந்திர விற்பனை எண்ணிக்கையில் மிக உயர்ந்த எண்ணிக்கையை பதிவு செய்தது.

கடந்த மார்ச்சில் மட்டும் இந்திய வாகன சந்தையில் சுமார் 7,550 ஆல்ட்ரோஸ் கார்களை விற்றது டாடா மோட்டார்ஸ். இதன் மூலம் FY22-க்கான பிரீமியம் ஹேட்ச்பேக் இடத்தில் ஆல்ட்ரோஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனிடையே நிறுவனத்தின் சாதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸின் உயரதிகாரியான ராஜன் அம்பா, "பெருந்தொற்று கடுமையாக இருந்த சவாலான காலங்களில் கூட நாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து இருக்கிறோம். எங்கள் கஸ்டமர்கள் மற்றும் பார்ட்னர்களின் தொடர் ஆதரவுக்கு மிகவும் நன்றி.

Also read... புது லுக்கில் ராயல்என்பீல்டு 650 கான்டினென்டல் - விலை எவ்வளவு தெரியுமா?

ஆல்ட்ரோஸ் காரின் ஒரு லட்சமாவது யூனிட் வெளியீட்டு சாதனை, பிரீமியம் ஹேட்ச்பேக் போன்ற சவாலான பிரிவில் இந்த காரின் வெற்றிக்கு மற்றொரு சான்று. இந்திய வாடிக்கையாளர்கள் அளித்து வரும் அங்கீகாரம் மற்றும் அதிகரிக்கும் மார்க்கெட் ஷேரை பெற்று வருவதால், எதிர்காலத்தில் ஆல்ட்ரோஸ் இன்னும் அதிக சாதனை படைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

இந்திய சந்தையில் ஆல்ட்ரோஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் இந்த காரின் டாப் என்ட் விலை ரூ.9.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஆல்ட்ரோஸ் டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்ஸ், EBD-யுடன் ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கொலாப்பஸிபிள் ஸ்டீயரிங், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹைஸ்பீட் அலெர்ட்ஸ் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. தவிர 1.2L ரெவோட்ரான் பெட்ரோல், 1.2L i- டர்போ பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் என்ஜின்கள் ஆகிய மூன்று எஞ்சின் தேர்வுகளுடன் 6 வேரியன்ட்கள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: