மின்சார வாகனமாக மாற்றியமைக்கப்பட்ட டாடா ஏஸ் - அதிகபட்சம் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் செல்லும்!

மின்சார வாகனமாக மாற்றியமைக்கப்பட்ட டாடா ஏஸ்

குட்டி யானை என்று செல்லமாக அழைக்கப்படும் வாகனம் டாடா ஏஸ். சிறிய ரக கமர்ஷியல் வாகன சந்தையில் டாடா ஏஸ் வாகனத்திற்கென்று ஒரு தன்னை மவுசு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீப காலமாக மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருளை பயன்படுத்தும் இன்டர்னல் கம்ப்யூஷன் (Internal Combustion) என்ஜின்களுக்கு பதிலாக, அவற்றை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதை பார்க்க முடிகிறது. இத்தகைய மாற்றங்கள் பயணிகள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிகம் செய்யப்பட்டு வந்தன. முதல் முதலாக ஒரு இலகு ரக வணிக வாகனத்திற்கு எலக்ட்ரிக் வாகன பவர்டிரெய்ன் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குட்டி யானை என்று செல்லமாக அழைக்கப்படும் வாகனம் டாடா ஏஸ். சிறிய ரக கமர்ஷியல் வாகன சந்தையில் டாடா ஏஸ் வாகனத்திற்கென்று ஒரு தன்னை மவுசு உள்ளது. இதன் வெற்றிக்கு காரணம் வசதியான கேபின், குறைவான சத்தம், குறைவான அதிர்வுகள், கூடுதல் சரக்குகளை ஏற்றும் வசதி என அடுக்கி கொண்டே போகலாம்.

இதனிடையே ரஷ் லேன் அறிக்கையின்படி, டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான இலகு ரக வணிக வாகனமான டாடா ஏஸ், வழக்கமான ஐசி எஞ்சினுக்கு பதிலாக மின்சார பவர் ட்ரெயினில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கத்திற்காவே இது செய்யப்பட்டதாகவும், வணிக நோக்கத்திற்காக இல்லை என்றும் அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. டாடா ஏஸில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நார்த்வே மோட்டார் ஸ்போர்ட் யூடியூபில் அப்லோட் செய்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வீடியோவில் காட்டப்பட்டுள்ள டாடா ஏஸ் வாகனம் மின்சார பவர் ட்ரெயின் கொண்டது. இது 18 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக்கை மின்சார மோட்டருடன் இணைக்கிறது. புனேவைச் சேர்ந்த ஒர்க்ஷாப் ஒன்று இதற்கான மின்சார வாகன பவர் ட்ரெய்னை வடிவமைத்து, தயாரித்துள்ளது. இது மோட்டார் ஷாஃப்ட்டில் 165 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது.

Also read... உங்கள் காரில் எப்போதும் தவறாமல் இருக்க வேண்டிய சில அடிப்படை பொருட்கள்!

இந்த இலகு ரக வாகனமானது அதன் ஐசி என்ஜின் பவர்டிரெயினில் 2 சிலிண்டர், 700 சிசி, நேச்சுரலி ஆஸ்ப்பிரேட்டட் டீசல் எஞ்சினிலிருந்து சக்தியை ஈர்க்கிறது. இது 20 பிஹெச்பி மற்றும் 45 என்எம் டார்க்கை உருவாக்குகிறது மற்றும் 694 சிசி MPFI, ஃபோர்-ஸ்ட்ரோக், வாட்டர் கூல்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வழங்கப்படுகிறது. மேலும் இது 30 bhp மற்றும் 55 Nm பீக் டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனத்தில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்ல முடியும். ஆனால் இன்டர்னல் கம்ப்யூஷன் என்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். மின்சார சார்ஜிங் விருப்பங்கள் 3 கிலோவாட் மின்சாரம் சார்ஜ் செய்ய ஒரு சிங்கிள் ஃபேஸ் 15ஏ சாக்கெட் மூலமாகவும், 12 கிலோவாட்டிற்கு த்ரீ ஃபேஸ் இண்டஸ்ட்ரியல் சாக்கெட் மூலமாகவும் வசதியை பெறலாம். ஸ்மார்ட் ஆன்-போர்டு சார்ஜர் வேகமான சார்ஜிங் நெட்வொர்க்கைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது மற்றும் ஒர்க்ஷாப் படி, எந்த த்ரீ ஃபேஸ் இணைப்பையும் த்ரீ ஃபாஸ்ட் சார்ஜராக பயன்படுத்தலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: