ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Tata Ace EV : எலக்ட்ரிக் டாடா ஏஸ் வாகனங்கள் இன்று முதல் விற்பனைக்கு!

Tata Ace EV : எலக்ட்ரிக் டாடா ஏஸ் வாகனங்கள் இன்று முதல் விற்பனைக்கு!

Tata Ace Ev

Tata Ace Ev

Tata Ace Ev | டாடா நிறுவனம் நகர்ப்புற சரக்கு டெலிவரிக்காக பயன்படும் வகையில் இன்று முதல் எலக்ட்ரிக் டாடா ஏஸ் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் இலகு ரக கார்கள் முதல் கனரக ட்ரக்குகள் வரை தயாரிக்கும் பாரம்பரியமான வாகன தயாரிப்பு நிறுவனம் டாடா ஆகும், அப்படிப்பட்ட அந்த நிறுவனம் அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய, நவீன தொழில்நுட்பங்களுடன் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகிறது. பாரம்பரியமான இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம் தற்போது சரக்கு வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகனங்களாக தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன் முதல் கட்டம் தான் டாடா ஏஸ் இவி. உள்ளூர் சரக்கு விநியோகத்திற்கு பயன்படும் வகையில் இந்த எலக்ட்ரிக் டாடா ஏஸ் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. பத்து லட்சத்தில் இருந்து விலை தொடங்குகிறது. கடந்த ஆண்டு மே மாதம் பிரத்யேக தயாரிப்பாக இத்தகைய வாகனங்கள் அமேசான், டிஹெச்எல், ஃபெடெக்ஸ், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு மட்டும் தயாரித்து வழங்கப்பட்டு இருந்தது. தற்போது பொது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய வாகனம் ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் பேக்கேஜோடு கிடைக்கும். அட்வான்ஸ்ட் பேட்டரி கூலிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தடையில்லாத இயக்குவது சாத்தியம். அதோடு, ஈவோஜென் பவர்ட்ரெய்ன் தொழில்நுட்பம் இருப்பதால் நீண்டு நேர இயக்கத்திற்கும் இந்த டாடா ஏஸ் இவி பயன்படும். எனினும் உள்ளூர் மற்றும் குறைந்த தூர பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது எனக் கூறப்படுகிறது.

27KW பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால் எஞ்சின் 36 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும். அதிக திறன் வெளிப்படுத்தப்படும் என்பதால் அதிக அளவிலான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் எக்கோ ஃபிரண்ட்லியாக தயாரிக்கப்பட்டுள்ளது இவி டாடா ஏஸ். இது போன்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் இதற்கான சார்ஜர் மையங்களை அமைக்கும் முயற்சியையும் மேற்கொள்ள உள்ளதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. ஜீரோ எமிசன் சரக்கு போக்குவரத்து என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இது முதல் படியாகும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கிரிஸ் வாக்.

First published:

Tags: Automobile, TATA