Home /News /automobile /

மினி ட்ரக் பிரிவில் பிரபலமாக இருக்கும் Tata Ace-ன் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மினி ட்ரக் பிரிவில் பிரபலமாக இருக்கும் Tata Ace-ன் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

 Tata Ace-ன் எலெக்ட்ரிக் மாடல்

Tata Ace-ன் எலெக்ட்ரிக் மாடல்

இந்த வாகனம் ரெகுலர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன்களை பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் கன்டெயினர் e-காமர்ஸ் தளவாடங்களுக்கான லைட்-வெயிட் மெட்டீரியல்களால் ஆனது.

  இந்தியாவின் மிக பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற டாடா ஏஸ் மினி ட்ரக்கை கடந்த 2005-ல் நாட்டில் அறிமுகப்படுத்தியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரபல Tata Ace ட்ரக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனான Ace EV-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Ace EV-யை சப்ளை செய்வதற்காக Amazon, BigBasket, City Link, DOT, Flipkart, LetsTransport, MoEVing மற்றும் Yelo EV போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ஏற்கனவே Ace EV-க்கான 39,000 யூனிட் ஆர்டர்களை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. அடுத்த காலாண்டில் Ace EV-யின் டெலிவரி தொடங்கும் போது இதன் விலை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

  Ace EV-யின் அறிமுக விழாவில் பேசிய டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், Ace EV அறிமுகம் மூலம், இ-கார்கோ மொபிலிட்டியின் புதிய சகாப்தத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்கி இந்தியாவின் மிக வெற்றிகரமான வணிக வாகனமாக இருக்கிறது Tata Ace. இப்போது அறிமுகம் இருக்கும் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சிறந்த மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வை வழங்கும்.

  ALSO READ | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியே ஆட்சி மொழி.. நிர்வாகம் ஆணை

  வணிக வாகனங்களில் நாங்கள் வெற்றிகரமாக மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் அந்த பிரிவில் பெரும் வரவேற்பையும் பிக்அப்பையும் காண்கிறோம் என்றார்.
  Ace EV என்பது டாடா மோட்டார்ஸின் EVOGEN பவர்டிரெய்னை கொண்ட முதல் தயாரிப்பு ஆகும். டிரைவிங் ரேஞ்சை அதிகரிக்க இது மேம்பட்ட பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களை பெறுகிறது.

  இந்த வாகனம் ரெகுலர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன்களை பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் கன்டெயினர் e-காமர்ஸ் தளவாடங்களுக்கான லைட்-வெயிட் மெட்டீரியல்களால் ஆனது. மேலும் Tata Ace EV ஆனது 130Nm பீக் டார்க்குடன் 27kW (36hp) மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. தவிர ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜை வழங்கும் என்றும் நிறுவனம் கூறி உள்ளது. Ace EV-ன் முக்கியத்துவம் குறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக், வளர்ந்து வரும் நகரமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் தளவாடத் துறையை வேகமாக மாற்றுகின்றன.

  ALSO READ | நேபாளத்துக்கு இனி ரயிலில் செல்லலாம் - எட்டு மாநிலங்களை இணைக்கும் இந்திய ரயில்வேயின் புதிய ரயில்!
   இ-காமர்ஸ் வளர்ந்து வருகிறது மற்றும் பொருட்களின் லாஸ்ட்-மைல் டெலிவரிக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது கஸ்டமைஸ்டு EV சொல்யூஷன்களுக்கான அடுத்த பெரிய வாய்ப்பை இது பிரதிபலிக்கிறது என்றார். இந்தியாவில் சிறிய சரக்கு வாகனப் பிரிவில் Tata Ace தற்போது 70 சதவீத சந்தைப் பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: TATA

  அடுத்த செய்தி