தமிழகத்தில் வாகனப்பதிவு உயர்வு - மார்ச் முதல் வீழ்ச்சி... செப்டம்பரில் எழுச்சி...

மாதிரிப்படம்

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து வீழ்ச்சி கண்டு வந்த வாகனப் பதிவுத்துறை, செப்டம்பர் மாதத்தில் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருசக்கர வாகனப் பதிவு, கடந்த ஆண்டை விட 19.87 சதவீதம் அதிகரித்துள்ளது

  ஆகஸ்ட் மாதத்தில் 17 சதவீதமும், ஜுலை மாதத்தில் 35 சதவீதமும் வீழ்ச்சி கண்ட இருசக்கர வாகனப் பதிவுத்துறை, தற்போது மீண்டு வந்துள்ளது. பயணிகள் வாகனப் பதிவும் கடந்த ஆண்டு செப்டம்பரை விட, இந்தாண்டு பத்து விழுக்காடு அதிகரித்துள்ளது.  எனினும் மூன்று சக்கர வாகனப் பதிவு, கடந்தாண்டை காட்டிலும் 53 சதவீதம் வரை குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

  ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் 81 விழுக்காடும், ஜுலை மாதத்தில் 86 விழுக்காடும் மூன்று சக்கர வாகனப் பதிவு வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தின் மொத்த வாகனப் பதிவு, கடந்த ஆண்டு செப்டம்பரை விட இந்தாண்டு 17.18 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஆட்டோமொபைல் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

   
  Published by:Sankar
  First published: