சென்னை, மதுரை, கோவையில் அரசு இ-பேருந்துகள்- போக்குவரத்துத்துறை அமைச்சர்

கூடுதலாக வரும் காலங்களில் 2ஆயிரம் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவையில் அரசு இ-பேருந்துகள்- போக்குவரத்துத்துறை அமைச்சர்
இ பஸ்
  • News18
  • Last Updated: June 11, 2019, 7:52 PM IST
  • Share this:
சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 500 எலெக்ட்ரிக் அரசுப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் அரசுப் பேருந்துகள் பயன்பாடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “முதற்கட்டமாக சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 அரசு இ- பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளோம். நச்சுப்புகை வெளியிட்டு காற்று மாசு அடைவதைக் குறைக்கவே அரசு இத்திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

கூடுதலாக வரும் காலங்களில் 2ஆயிரம் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகளைப் பொறுத்தவரையில் மாநிலத்தில் உள்ள 32,576 பேருந்துகளில் 1,009 பேருந்துகள் தகுதியற்றவையாகக் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


24.20 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

மேலும் பார்க்க: இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவு- கடந்த ஆண்டைவிட 26% வீழ்ச்சி!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்