• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Electric Bike | எலக்ட்ரிக் பைக் வாங்கப் போறீங்களா? இதை எல்லாம் தவறாமல் கவனிங்க!

Electric Bike | எலக்ட்ரிக் பைக் வாங்கப் போறீங்களா? இதை எல்லாம் தவறாமல் கவனிங்க!

நீங்கள் எலக்ட்ரிக் பைக் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று அதன் எடை.

  • Share this:
பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. எலக்ட்ரிக் பைக்குகள் என்று நினைக்கும் போது, பரவலாக ‘எடை குறைவான’ பைக் என்பதை நினைப்பதில்லை. ஏனென்றால், பாரம்பரியமான மின்-பைக்குகள் எல்லாமே கொஞ்சம் கனமான பைக்குகள் தான். குறிப்பாக, பேட்டரி மற்றும் மோட்டாரின் எடை ஆகியவை பைக்குகளின் எடையை கணிசமாக அதிகரிக்கும். ஆனால், தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றத்தால், மின்-பைக்குகள் எப்போதையும் விட மிகவும் குறைவான எடையில், கையாள்வதற்கு எளிதாக இருக்கிறது. நீங்கள் எலக்ட்ரிக் பைக் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று அதன் எடை. குறைவான பைக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நீங்கள் எவ்வளவு வேகமாக செல்ல முடியும், எவ்வளவு தூரம் செல்ல முடியும் மற்றும் ஒட்டுமொத்த நகரும் தன்மையை தீர்மானிப்பதில் எலக்ட்ரிக் பைக்கின் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. எடை குறைவான மின் பைக்குகள் மிகவும் உயர்ந்த செயல்திறன் கொண்டவை, குறிப்பாக நீங்கள் நகர்ப்புற சூழலில் வசிக்கிறீர்கள், அல்லது பயணிக்கிறீர்கள் என்றால், எலக்ட்ரிக் பைக்கில் லைட் வெயிட் மாடல்கள் உங்களுக்கு ஏற்றவை ஆகும்.

அதிகமான எடையுள்ள பொருட்களை எடுத்து செல்வதில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் எடை குறைவாக இருக்கும் மின்-பைக் தேர்வு செய்வது மிகவும் நல்லது. 10 கிலோ வித்தியாசம் இருந்தாலும், உங்களால் எலக்ட்ரிக் பைக்கை சுலபமாக கையாள முடியும், ஓட்டிச்செல்ல முடியும். கைகலாலேயே நீங்கள் பைக்கை தூக்கிச் செல்லும் அளவுக்கு மின்பைக்குள் குறைவான எடையில் வருகிறது. மின் பைக் வாங்குவதற்கு முன் பல அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அதன் எடையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Must Read | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

மின் பைக்குகளில் உள்ள மற்றொரு வசதி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சைக்கிளைப் போல ஓட்டிச் செல்ல முடியும் என்பது ஆகும். நீங்கள் உங்கள் பைக்கை ஹைப்ரிட் மாடலாக, பைக்காகவும், பெடல் செய்து சைக்கிளாகவும் பயன்படுத்தினால், எடை குறைவான மின் பைக் மிகவும் வசதியாக இருக்கும். எடை அதிகமாக உள்ள மின் பைக்குகளை நீங்கள் பெடல் செய்தால், மலை ஏறுவது போல கடினமாக உணரக்கூடும்.

லைட் வெயிட் பைக்குகளை நீண்ட தூரம் ஓட்டிச் செல்வது மிகவும் சுலபமானது. எடை குறைவான ஹைப்ரிட் மாடல் மின் பைக்குகள் எப்போதுமே சாதாரண சைக்கிள்களை போலத் தான் தோற்றமளிக்கும். எனவே, உங்கள் பைக் பாதுகாப்பாக இருக்கும்.

மின் பைக்கின் ஃபிரேமுக்குள் பேட்டரியை பொருத்துவதற்கும், பைக்கின் எடையை குறைவாக வைத்திருக்கவும், எடை குறைவாக இருக்கும் மின் பைக்குகளில் பெரும்பாலும், குறைவான திறன் கொண்ட பேட்டரிகளையே பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக குறைவான எடை, மோட்டாரின் செயல்திறனை மேம்படுத்தும். இதனால், மின் பைக்குகளின் ஆயுள் கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: