Home /News /automobile /

வேற லெவல் அட்வென்ச்சர் பைக் ஆக Suzuki V-Strom SX இந்தியாவில் அறிமுகம்.!

வேற லெவல் அட்வென்ச்சர் பைக் ஆக Suzuki V-Strom SX இந்தியாவில் அறிமுகம்.!

Suzuki V-Strom SX

Suzuki V-Strom SX

Suzuki V-Strom SX | இந்த ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் எடையை குறைக்க இதன் வால்வுகள், ஷிம் டைப் ரோலர் ராக்கர் ஆர்ம்ஸ், ரிடெய்னர்கள் மற்றும் பிஸ்டன் ஆகியவற்றை உருவாக்க மோட்டோஜிபியின் அனலிடிக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) இந்தியாவில் அதன் வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 2.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இந்த புதிய பைக்கின் அறிமுகத்தின் வாயிலாக, சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமானது 250சிசி ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டூரர் (sports adventure tourer) பிரிவில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்த ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டூரரின் பீக் டிசைன் (Beak Design) ஆனது புகழ்பெற்ற டிஆர்-இசட் ரேசர் மற்றும் டிஆர்-பிக் ஆஃப்-ரோடு மாடல்களால் ஈர்க்கப்பட்டு, வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸிற்காக 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது. இது ஆக்டோகனல் வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்களை பெற்றுள்ளது.

மேலும் இந்த புதிய சுஸூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் பைக் ஆனது சுசுகி ஆயில்-கூலிங் சிஸ்டம் (SOCS), 249சிசி, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர்களுடன் வருகிறது. உடன் சுஸூகி ஈஸி ஸ்மார்ட் சிஸ்டம், சுஸூகி ரைட் கனெக்ட், மற்றும் யூஎஸ்பி அவுட்லெட் ஆகியவற்றையும் பேக் செய்கிறது. எல்லா நிலப்பரப்புகளிலும் எல்லா நேரங்களிலும் மிகவும் வசதியாக சவாரி செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டமானது ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கும்.

இந்த லேட்டஸ்ட் சுஸூகி பைக்கில் சுஸூகி ரைட் கனெக்ட் அம்சமும் பொருத்தப்பட்டுள்ளது, இது பைக்கின் ப்ளூடூத் எனேபிள்டு டிஜிட்டல் கன்சோல் உடன் உங்கள் ஸ்மார்ட்போனை மிகவும் எளிமையாக சிங்க் (Sync) செய்ய உதவும். இது டேர்ன்-பை-டேர்ன் நேவிகேஷன், இன்கம்மிங் கால், எஸ்எம்எஸ் அலெர்ட், மிஸ்டு கால், ஸ்பீட் எக்ஸீடிங் வார்னிங், போன் பேட்டரி லெவல் மற்றும் எஸ்டிமேடட் டைம் ஆப் அரைவல் (Eestimated time of arrival) போன்றவைகளை டிஸ்பிளே செய்யும்.



இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் இடது பக்கத்தில் உள்ள யூஎஸ்பி அவுட்லெட் வழியாக உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்ய முடியும். இது நீல நிறத்தில் பளபளப்பாக காட்சியளிப்பதால், குறைந்த வெளிச்சத்தில் கூட அதை சரியாக கண்டறிந்து பயன்படுத்த முடிகிறது.

Also Read : மஹிந்திரா கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்!

இந்த ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் எடையை குறைக்க இதன் வால்வுகள், ஷிம் டைப் ரோலர் ராக்கர் ஆர்ம்ஸ், ரிடெய்னர்கள் மற்றும் பிஸ்டன் ஆகியவற்றை உருவாக்க மோட்டோஜிபியின் அனலிடிக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சி-ஸ்ட்ராம் பைக்கின் பிஸ்டன், இன்க்ரீஸ்ட்டு அவுட்புட் மற்றும் சிறந்த எரிபொருள் திறன் ஆகியவற்றிற்கு பெரும் பங்களிக்கிறது. ஆகமொத்தம், மோட்டோஜிபி தொழில்நுட்பத்தை பெற்றுள்ள இந்த லேட்டஸ்ட் பைக் ஆனது சிட்டி ரைட் முதல் ஹை-ஸ்பீட் க்ரூஸிங் வரை பல்வேறு சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Also Read : Maruti Suzuki கார் வாங்க போறீங்களா..! ஹேப்பி நியூஸ்.. வேற லெவல் சலுகைகள்

இந்த ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டூரர், உங்களின் ரைட்டிங் கண்டிஷன்களுக்கு ஏற்ற சிறந்த அளவிலான ஃப்யூயலை மானிடர் செய்யவும், டெலிவரி செய்யவும் எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் (electronic fuel injection) டேட்டாவை வழங்கும் சென்சார்களுடன் வருகிறது. மேலும் இது எஸ்இபி (SEP) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, இதன் கீழ் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் சமரசம் இல்லாத எரிபொருள் செயல்திறனை வழங்குவதாக சுஸூகி நிறுவனம் உறுதியளிக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி