Home /News /automobile /

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் சுசுகியின் நடுத்தர மற்றும் உயர் பிரிவு மோட்டார் சைக்கிள்கள்

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் சுசுகியின் நடுத்தர மற்றும் உயர் பிரிவு மோட்டார் சைக்கிள்கள்

 சுசுகி

சுசுகி

சுசுகி இந்தியா நிறுவனம் 70 சதவீத மோட்டார் சைக்கிள்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 21-22 நிதியாண்டில் சுசுகி 70,000 என்பதிலிருந்து 1,45,000 யூனிட்டுகளாக்கி தனது ஏற்றுமதியை இரட்டிப்பாக்கியது. 

2021-22-ஆம் நிதியாண்டில் இரு சக்கர வாகன தொழில் துறையானது பல தடைகளை எதிர்கொண்டது மற்றும் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு செய்தது. ஆனால் சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தான் இந்த நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே நிறுவனம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்போது நிலவி வரும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் காரணமாக, இந்த ஜப்பானிய வாகன நிறுவனத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவன தயாரிப்புகள் தற்போது இந்தியாவின் இரு சக்கர வாகன துறையில் 50 சதவீத பங்களிப்பைத் தருகின்றன. 2021-22 நிதியாண்டில் சந்தை பங்கில் வெறும் 1.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இந்திய மார்க்கெட்டில் சுசுகியின் விற்பனையில் 94 சதவீதம் அதன் Access 125 மற்றும் சமீபத்திய Avnis ஸ்கூட்டர்கள் போன்றவற்றிலிருந்து வருகிறது. மறுபுறம் சுசுகி இந்தியா நிறுவனம் 70 சதவீத மோட்டார் சைக்கிள்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 21-22 நிதியாண்டில் சுசுகி 70,000 என்பதிலிருந்து 1,45,000 யூனிட்டுகளாக்கி தனது ஏற்றுமதியை இரட்டிப்பாக்கியது.

இதனிடையே சுசுகி இந்தியாவின் எக்ஸிகியூட்டிவ் அதிகாரியான வி.பி. தேவாஷிஷ் ஹண்டா கூறும் போது, செமி-கண்டக்டர் சப்ளை சிக்கலால் தடை ஏற்பட்டாலும், 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 222 Suzuki Hayabusa யூனிட்களை விற்பனை செய்தோம். இதே ஆண்டில் V-Strom 650 அட்வென்ச்சர் பைக்கின் 70 யூனிட்களை விற்றோம். பெரிய பவர் பைக்குகள் இன்னும் இந்தியாவில் ஒரு முக்கிய சந்தையாக இருக்கின்றன. எனவே ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் என்ற முறையில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் செயல்திறனின் அடிப்படையில் உயர்தர மோட்டார் சைக்கிள்கள் முக்கியமானவையாக இருக்கின்றன என்றார். சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் இந்தியாவை 125-300cc மோட்டார் சைக்கிள்களுக்கான முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

Also read... புதிய Toyota Glanza vs புதிய Maruti Suzuki Baleno... வேறுபாடுகள் என்ன?

மேலும் பேசிய தேவாஷிஷ் ஹண்டா, இந்த 2022-ஆம் ஆண்டில் சுசுகியின் மோட்டார் சைக்கிள் போர்ட்ஃபோலியோவை விரிவாக்கம் செய்ய உள்ள தகவலையும் கூறினார். தங்களது புதிய தயாரிப்புகள் மிடில் வெயிட் முதல் ஹை-என்ட் செக்மென்ட் வரை தொடர்ந்து இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். உற்பத்தி துறையை பொறுத்தமட்டில் சுசுகி அதன் மொத்த திறனில் சுமார் 75%-ல் இயங்கி வருகிறது.

இதுவே ஆண்டுக்கு 1 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் ஆகும். 2021-ஆம் ஆண்டில் சுசுகி ஆலையில் உற்பத்தி குறைக்கப்பட்டதற்கு விநியோக சங்கிலி சீர்குலைவுகள் முக்கிய காரணியாக இருந்தன. குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை செமி கண்டெக்டர் பற்றாக்குறை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சுசுகி நிறுவனம் தற்போதைய தொழில்துறை சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Maruti Suzuki

அடுத்த செய்தி