பி.எம்.டபுள்யூ-வை பின்னுக்கு தள்ளிய சுஸுகி !!!

news18
Updated: August 25, 2018, 6:28 PM IST
பி.எம்.டபுள்யூ-வை பின்னுக்கு தள்ளிய சுஸுகி !!!
மாருது சுஸுகி ஸ்விஃப்ட்.
news18
Updated: August 25, 2018, 6:28 PM IST
அதிக கார்கள் விற்கும் நிறுவனங்களின் பட்டியலில் சுஸுகி நிறுவனம், பிஎம்டபுள்யூ-வை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.

கடந்த காலாண்டில், ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான சுஸுகி 11.8 சதவீதம் லாபத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம்  11.4 சதவீதம் லாபம் ஈட்டியுள்ள ஜெர்மனி  நிறுவனமான பிஎம்டபுள்யூ-வை  பின்னுக்குத் தள்ளி, சுஸுகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

டீசல் சந்தையில் நடந்துவரும் பிரச்னைகள் காரணமாகவும், அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு கொள்கைகளாலும் பிஎம்டபுள்யூ-ன் விற்பனை பாதிப்படைந்துள்ளது. ஆனால், இந்த வருடம் முழுமைக்கும் பார்க்கும்போது பிஎம்டபுள்யூ நிறுவனமே அதிக கார்களை விற்று லாபம் ஈட்டிய நிறுவனமாக இருக்கிறது. சுஸுகி நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டுமே விற்பனையில் முன்னணி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் சுஸுகி நிறுவனத்தின் கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் மட்டும் சுஸுகி நிறுவனத்தின் லாபம் 68 சதவீதம் உயர்ந்துள்ளது.

 
First published: August 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...