முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 2030-ஆம் நிதியாண்டுக்குள் 6 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ள சுசுகி மோட்டார்

2030-ஆம் நிதியாண்டுக்குள் 6 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ள சுசுகி மோட்டார்

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

ஜப்பானில் பசுவின் சாணத்தில் இருந்து பெறப்படும் உயிர்வாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் Fujisan Asagiri Biomass LLC நிறுவனத்திலும் முதலீடு செய்து ஆய்வைத் தொடங்கி இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியாவில் வரும் 2030-ஆம் நிதியாண்டிற்குள் 6 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தவிர மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கின்படி 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் நியூட்ராலிட்டியை அடைய தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பேட்டரி EV-க்கள் மட்டுமின்றி, CNG, பயோகேஸ் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தி கார்பன்-நியூட்ரல் இன்டெர்னல் கம்ப்யூஷன் எஞ்சின் வாகனங்களையும் வழங்கு உள்ளதாக சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் (SMC) நிறுவனம் கூறி இருக்கிறது.

இந்தியாவில் 2024 நிதியாண்டில்ல் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அறிவிக்கப்பட்ட SUV பேட்டரி EV-க்களை அறிமுகப்படுத்துவோம். மேலும் FY2030-க்குள் 6 மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் அதன் பேட்டரி EV அறிமுக திட்டத்தில் கூறியது. மேலும் அந்த அறிக்கையில் FY2030-க்குள் எங்களது மொத்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் பேட்டரி EV-க்கள் 15% இருக்கும் என்றும், இன்டெர்னல் கம்ப்யூஷன் எஞ்சின் வாகனங்கள் 60% மற்றும் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் 25% இருக்கும் என்றும் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்திய பிரிவான மாருதி சுசுகி இந்தியா தற்போது நாட்டின் மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சந்தைக்கு வர உள்ள கான்செப்ட் எலெக்ட்ரிக் SUV 'eVX'ஐ வெளியிட்டது. இதற்கிடையே வரும் 2030-ஆம் நிதியாண்டிற்குள் இந்திய சந்தை வளர்ச்சியடையும் என நாங்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில், தயாரிப்புகளில் இருந்து CO2 உமிழ்வைக் குறைத்தாலும், மொத்த CO2 உமிழ்வு அளவு அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்றும் நாங்கள் நினைக்கிறோம் என SMC குறிப்பிட்டுள்ளது.

Read More : மாட்டு சாணத்தால் இயங்கும் கார் - மாருதி சுசுகி நிறுவனத்தின் பலே திட்டம்.!

எனவே சேல்ஸ் யூனிட்ஸ்களை அதிகரிப்பதற்கும், மொத்த CO2 உமிழ்வு அளவை குறைப்பதற்கும் இடையே சமநிலையை உருவாக்குவதற்கும் இருக்கும் சவாலை நாங்கள் கையாள்வோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சவாலைச் சமாளிப்பதற்கான சுசுகியின் தனித்துவ முன்முயற்சி பயோகேஸ் வணிகமாகும். நாட்டின் கிராமப்புறங்களில் முக்கியமாக காணக்கூடிய கழிவுகளான பசுவின் சாணத்திலிருந்து பயோகேஸ் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிஎன்ஜி கார் சந்தையில் தோராயமாக 70% பங்கு வகிக்கும் சுசுகியின் சிஎன்ஜி மாடல்களுக்கு இந்த பயோகேஸ் பயன்படுத்தப்படலாம்.

உலக நாடுகளின் அரசுகள் நிர்ணயிக்கும் இலக்கு தேதியின் அடிப்படையில் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் 2050-ஆம் ஆண்டிலும், இந்தியாவில் 2070-ஆம் ஆண்டிலும் கார்பன் நியூட்ராலிட்டியை அடைவதை சுசுகி நோக்கமாக கொண்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு நிறுவனமான தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான பனாஸ் டெய்ரி ஆகியவற்றுடன் பயோகேஸ் வணிகத்திற்காக சுசுகி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஜப்பானில் பசுவின் சாணத்தில் இருந்து பெறப்படும் உயிர்வாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் Fujisan Asagiri Biomass LLC நிறுவனத்திலும் முதலீடு செய்து ஆய்வைத் தொடங்கி இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயோகேஸ் வணிகமானது இந்தியாவில் கார்பன் நடுநிலைமைக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் இந்திய சமூகத்திற்கு பங்களிக்கிறது என்று நம்புவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சுசுகி சப்ளையர்ஸ் அசோசியேஷன், ஜப்பான் மற்றும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பு உள்ளிட்ட அவுட்சைட் பார்ட்னர்ஸ்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் உற்பத்தி வலிமையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் சுசுகி இன்னோவேஷன் சென்டர் இந்தியாவில் முழுமையாக வேரூன்ற புதிய கனெக்ஷன்ஸ் மற்றும் இன்னோவேஷன்ஸ்களை ஆராய்ந்து வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Electric bike, Electric car