சுஸுகி இண்ட்ருடர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்

Web Desk | news18
Updated: September 29, 2018, 7:26 PM IST
சுஸுகி இண்ட்ருடர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்
சுஸுகி இண்ட்ருடர் SP
Web Desk | news18
Updated: September 29, 2018, 7:26 PM IST
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தன்னுடைய இண்ட்ருடர் மற்றும் இண்ட்ருடர் Fi பைக்குகளின் ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுஸுகி நிறுவனத்தின் புதிய பைக்குகளில் ஒன்று இண்ட்ருடர். `குரூஸர்' வகை பைக்கான இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இண்ட்ருடர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன்களாக இண்ட்ருடர் SP மற்றும் இண்ட்ருடர் Fi SP ஆகிய புதிய பைக்குகளை சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த SP வகை பைக்குகள் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) வசதி கொண்டது. இந்த பைக்குகள் மேட் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
இண்ட்ருடர் SP

இது குறித்து பேசிய சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சடோஷி உச்சிண்டா “இண்ட்ருடரின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பைக்குகளின் பிரேத்யகமான டிசைன், ஸ்போர்டி லுக் ஆகியவை கூட்டத்தில் தனித்து தெரியவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

இண்ட்ருடர் 150 பைக் ஸ்டாண்டர்ட் ஏபிஎஸ், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்டேஷன், எஸ் ஈ பி இன்ஜின் ஆகிய வசதிகளை கொண்டது. புதிய இண்ட்ருடர் 150 எஸ் பி பைக்கின் விலை ₹1 லட்சமாகும். இண்டிருடர் 150 Fi SP பைக்கின் விலை ₹1.07 லட்சம்.
First published: September 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...