சுசூகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை எஸ்யுவி!

news18
Updated: July 2, 2018, 8:53 PM IST
சுசூகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை எஸ்யுவி!
சுசுகி ஜிம்னி
news18
Updated: July 2, 2018, 8:53 PM IST
ஜப்பானின் சுசூகி நிறுவனம் ஜிம்னி என்ற புதிய எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஃப் ரோட் காரான ஜிம்னியின் விலை இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் நான்கு வகைகளில் வரும் ஜிம்னியின் பேஸ் மாடலான ஜிம்னி எக்ஸ்ஜி என்ற மாடல் 9.02 லட்சம் ரூபாயாகும். டாப் எண்ட் வகையான ஜிம்னி சியரா ஜேசியின் விலை ரூ. 12.49 லட்சம். ஜிம்னி எக்ஸ்ஜி, எகஸ்எல் மற்றும் எக்ஸ்சி ஆகிய 3 வகைகளில் வந்துள்ளது. டாப் எண்ட் மாடலான ஜிம்னி சியரா ஜேஎல் மற்றும் ஜேசி என்ற இரண்டு வகைகளில் வருகிறது.
சுசூகி ஜிம்னி

660சிசி இன்ஜினுடன் வரும் ஜிம்னி, 3 சிலிண்டர்கள் உள்ள பெட்ரோல் இன்ஜின் உடையது. ஜிம்னி சியரா இதைவிட பெரிய இன்ஜினுடன் வருகிறது. இரண்டு வகைகளும் 5 கியர்கள் அல்லது 4 கியர்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் வகைகளிலும் கிடைக்கிறது.

மூன்று கதவுகளைக் கொண்ட ஜிம்னி முழுக்க முழுக்க விண்டேஜ் லுக்கில் இருக்கிறது. கருப்பு கிரிள்ளுடன், வட்ட வடிவிலான

Loading...

ஹெட் லைட்ட் மற்றும் இனிடிகேட்டரும், ஜிம்னிக்கு மஸ்குலர் லுக்கை கொடுக்கிறது. ஜப்பான் சந்தையில் நல்ல வரவேற்பைப்
பெரும் என எதிர்பார்க்கப்படும் ஜிம்னி கூடிய விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
First published: July 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...