புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுசூகி

புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுசூகி
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125
  • News18
  • Last Updated: July 19, 2018, 7:57 PM IST
  • Share this:
சுசூகி நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 68,000 ரூபாயாகும்.

பர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுசூகி டீலர்ஷிப் கடைகளில் இந்த ஸ்கூட்டரை 5000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஸ்கூட்டரின் மாதிரியை சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டர் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப் கொண்டது. மேலும் விண்ட் டிஃப்லெக்டர், கிரோம் ஃபினிஷிங், அழகிய ஸ்போரிவ் மட்கார்ட், பாதுகாப்புக்கு செண்ட்ரல் லாக்கிங், பாட்டில் ஹோல்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் டிஜிட்டல் மீட்டர் என சகல வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.பர்க்மேன் ஸ்டிரீட் 125

மேக்ஸி வகை ஸ்கூட்டரான பர்க்மேன் ஸ்டிரீட் 125 பெரிய ஹெட் லைட், நீளமான சீட் மற்றும் பெரிய விண்ட் ஸ்கிரீன் கொண்டவை. இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துள்ள மேக்ஸி வகை ஸ்கூட்டர் இதுவாகும். கைனெடிக் பிளேஸ் ஸ்கூட்டர்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கடைசி மேக்ஸி ஸ்கூட்டர்.

Loading...

125சிசி இன்ஜின் திறன் கொண்ட இந்த பர்க்மென் ஸ்கூட்டர் ஏற்கெனவே பர்க்மேன் என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் சுசுகி ஸ்கூட்டர்களின் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுசுகி நிறுவனத்தின் ஆக்சஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து சுசுகி நிறுவனம் இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆக்சஸ் ஸ்கூட்டரை போலவே அதே இன்ஜின், சேசிஸ் கொண்டிருந்தாலும், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125-ன் வீல் மற்றும் சஸ்பென்ஷன் ஆக்சஸ் ஸ்கூட்டரை விட அதிக எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
First published: July 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...