Home /News /automobile /

Avenis 125 ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி - விலை எவ்வளவு தெரியுமா!

Avenis 125 ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி - விலை எவ்வளவு தெரியுமா!

suzuki avenis 125

suzuki avenis 125

Suzuki Avenis 125 Scooter | சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் சில மதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அவெனிஸ் ஸ்கூட்டரின் (Suzuki Avenis 125) புதிய எடிஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் சுசுகி நிறுவனம் ஆல்-நியூ அவெனிஸ் 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் எடிஷனை (Standard Edition) நிறுவனம் ரூ.86,500 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக நிறுவனம் அவெனிஸ் ஸ்கூட்டரின் ரைட் கனெக்ட் எடிஷன் மற்றும் ரேஸ் எடிஷனை அறிமுகப்படுத்தியது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ஸ்டாண்டர்ட் எடிஷன் ஸ்கூட்டரானது, ரைட் கனெக்ட் எடிஷனை விட ரூ.1,500 மற்றும் ரேஸ் எடிஷனை விட ரூ.1,800 மலிவானது.

Avenis 125 ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்து வெவ்வேறு எடிஷன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. ரைடர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ஸ்டாண்டர்ட் எடிஷனிலும், எரிபொருளை ஈசியாக நிரப்ப வெளிப்புறத்தில் ஃப்யூவல் டேங்க் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர நிறைய இடவசதி அளிக்கும் வகையில் பெரிய அன்டர் சீட் கெப்பாசிட்டி உள்ளது.

மேம்பட்ட ஸ்போர்ட்டி ஸ்டைலிங், ரியர் இண்டிகேட்டர்ஸ், பாடி மவுண்ட் பிரைட் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் ஆகியவை ஸ்டாண்டர்ட் எடிஷன் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் உள்ளது. சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட். லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் சடோஷி உச்சிடா பேசும் போது, இந்திய மார்க்கெட்டில் எங்களது புதிய தயாரிப்பான Avenis பெற்றுள்ள வரவேற்பிற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களிடையே முதல் முறை அறிமுகம் செய்யும் போது சிறந்த ஸ்போர்ட்டி டிசைன் கொண்ட தரமான ஸ்கூட்டர் என்ற பெயரை பெறும் என்று நம்பினோம். அந்த எண்ணம் இன்று உண்மையாகி இருக்கிறது. அவெனிஸின் ஸ்டாண்டர்ட் எடிஷனின் அறிமுகம், Gen Z வாடிக்கையாளர்களுக்கு எங்களது சிறந்த ஸ்கூட்டரில் இருந்து தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

Suzuki Avenis ஸ்கூட்டரானது FI தொழில்நுட்பத்துடன் கூடிய 125cc இயந்திரம் மற்றும் 6750rpm இல் 8.7ps பவர் மற்றும் 5500rpm இல் 10Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. லைட் வெயிட்பாடி கொண்ட இந்த ஸ்கூட்டரின் எடை 106 கிலோ ஆகும். அவெனிஸ் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் எடிஷனில் ப்ளூடூத்-எனேபிள்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, இது பேசிக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டுள்ளது, இது நேரம், பயணத் தகவல், பயண மீட்டர் ரீட்-அவுட், ஃப்யூயல் இண்டிகேட்டர் போன்றவற்றை வழங்குகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki

அடுத்த செய்தி