வாகனத்தின் ஒரிஜினல் டிசைனை மாற்றுவது இனி சட்டவிரோதம்...!

1989, கேரள மோட்டார் வாகனச் சட்டம் அடிப்படையில் தோற்ற மாற்றங்கள் ஏற்புடையதே எனக் கூறப்பட்டிருந்தது.

Web Desk | news18
Updated: January 11, 2019, 12:08 PM IST
வாகனத்தின் ஒரிஜினல் டிசைனை மாற்றுவது இனி சட்டவிரோதம்...!
மாற்றி வடிவமைக்கப்பட்ட ப்ரெஸ்சா (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: January 11, 2019, 12:08 PM IST
உற்பத்தியாளர் வடிவமைத்த வாகனத்தின் தோற்றத்தை மாற்றுவது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாகனம் பதிவு செய்யப்படும்போது எந்த வடிவமைப்பில் உற்பத்தியாளரால் வழங்கப்பட்டுள்ளதோ அதை மாற்றம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் வாகன வடிவமைப்பு மாற்றம் என்பது சட்டவிரோதம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இந்த சட்டவிதிமுறை குறித்தான வழக்கு விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் வினித் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் வாகன வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத் தோற்ற மாற்றம் குறித்த சட்டவிதிமுறைகளை தெளிவுபடுத்தினர்.

உச்சநீதிமன்றம்


1989, கேரள மோட்டார் வாகனச் சட்டம் அடிப்படையில் தோற்ற மாற்றங்கள் ஏற்புடையதே எனக் கூறப்பட்டிருந்தது.

இச்சட்டம் மீதான முறையீடு வழக்கிலேயே வாகன மாற்றம் என்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Loading...
மேலும், ‘ஒரு வாகனம் அதனது திறன், சாலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் இவற்றை பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்புடையதல்ல’ என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் பார்க்க: தயக்கம் காட்டும் அதிமுக... ரஜினியை அழைக்கிறாரா மோடி?
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...