பி.எஸ். 4 ரக வாகனங்கள் பதிவை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பி.எஸ். 4 ரக வாகனங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது தடையை மீறி ஊரடங்கில் வாகனங்கள் விற்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பி.எஸ். 4 ரக வாகன பதிவையும் நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.எஸ். 4 ரக வாகனங்கள் பதிவை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 31, 2020, 7:44 PM IST
  • Share this:
நாடு முழுவதும் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். 6 மாசு கட்டுப்பாட்டு தரத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்கப்பட வேண்டுமென 2018-ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பி.எஸ்.4 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களை 2020 மார்ச் 31 வரை மட்டுமே விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ அனுமதிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஊரடங்கை காரணம் காட்டி, இதற்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது.

அந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், விற்பனையாகாமல் உள்ள 10 சதவீத பி.எஸ். 4 ரக வாகனங்களை 10 நாட்கள் வரை விற்பனை செய்யலாம் என மார்ச் 27-ல் அனுமதியளித்தது. ஆனால் மார்ச் 31-க்குப் பிறகு பி..எஸ். 4 ரக வாகனங்கள் விற்பனை செய்யப்படாது என மத்திய அரசு உறுதியாக இருந்ததால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.


விற்பனையாகாமல் உள்ள பி.எஸ். 4 ரக வாகனங்களை உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டுமென ஜூலை 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முறையீடு செய்தது. அந்த வாகனங்கள் வெளி்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அந்த கூட்டமைப்பு கூறியது.

காலக் கெடு குறித்து அறிந்தும் வாகனங்கள் ஏன் உற்பத்தி செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 1 லட்சம் வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மார்ச் 27-க்குப் பின்னர் அவசரகதியில் இரண்டரை லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டதாக, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.





நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் அவை ஆன்லைன் அல்லது நேரடி விற்பனை என எந்த முறையில் விற்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,ஊரடங்கில் விற்கப்பட்ட பி.எஸ். 4 வாகனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை பி.எஸ். 4 ரக வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஒத்திவைத்தது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading