இந்தியாவில் BS-4 ரக வாகன விற்பனைக்கு தடை

இந்தியாவில் பிஎஸ்-4 ரக வாகன விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் BS-4 ரக வாகன விற்பனைக்கு தடை
கோப்புப் படம்
  • Share this:
நாடு முழுவதும் பிஎஸ்-4 ரக வாகனங்களை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு லட்சத்து 5,000 பிஎஸ்-4 ரக வாகனங்களை மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி 2 லட்சத்து 55 வாகனங்கள் விற்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, மார்ச் 27ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.இதேபோன்று பதிவு செய்த வாகனங்களின் விவரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த பிஎஸ்-6 ரக வாகனங்கள் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பிஎஸ்-4 ரக வாகனங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க...ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

 
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading