• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • குழந்தைகள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம் - புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட அறிவிப்புகள்!

குழந்தைகள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம் - புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட அறிவிப்புகள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதில் பல கடுமையான தண்டனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்கள் கடுமையான தண்டனைகளை பெறுவதுடன், அதிக அபராதம் செலுத்தும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த சட்டம் குறித்து பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கூடுதல் அபராதங்களை கட்டவேண்டியிருக்கும்.

உலகளவில் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்குபவையாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சாலைப் பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் மத்திய அரசு 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

அதில் பல கடுமையான தண்டனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்கள் கடுமையான தண்டனைகளை பெறுவதுடன், அதிக அபராதம் செலுத்தும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விபத்தில் சிக்குவதை முழுமையாக தவிர்க்கும் வகையில், விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, கடந்த சில ஆண்டுகளாக சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிகளவில் சிக்குவதாகவும், இதனை குறைக்கும் பொருட்டு இத்தகைய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

புதிய மோட்டார் வாகன திருத்தத் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

1. மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இந்த விதிகள் 2022 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளை, அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்ப தங்கள் சட்டங்களை திருத்தியமைக்க வேண்டும்.

2. மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளும் போக்குவரத்து சட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கிறது.

3. இரு சக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகள் கட்டாயம் ISI அங்கீகாரம் பெற்ற ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

Also read... குரூயிசர் பைக்குகளை களமிறக்கும் கோமாகி - இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்!

4. இரு சக்கர வாகனத்தில் குழந்தை பயணிக்கும் பட்சத்தில், மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரைத்தபடி, அதிகப்பட்ச வேகம் 40 kmph -ஐ தாண்டக்கூடாது. மீறினால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் ஓட்டுனர் உரிமம், மூன்று மாதங்களுக்கு, தண்டனையாக பறிக்கப்படும்.

5. இரு சக்கர வகானங்களை ஓட்டுபவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு கவச சங்கிலியைப் (safety harness) பயன்படுத்த வேண்டும். நன்கு மிருதுவான, அதிக அடர்த்தியுடன், பல நைலான் இழைகளைக் கொண்டு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒருவேளை கீழே விழுந்தாலும் அதிக காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்த கவசத்தை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: