• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிய தயாரிப்புகளில் இறங்கிய ஸ்டீல்பர்டு நிறுவனம் - கிரீஸ், என்ஞ்சின் ஆயில் அறிமுகம்!

புதிய தயாரிப்புகளில் இறங்கிய ஸ்டீல்பர்டு நிறுவனம் - கிரீஸ், என்ஞ்சின் ஆயில் அறிமுகம்!

ஸ்டீல்பர்டு

ஸ்டீல்பர்டு

ஸ்டீல்பேர்டு நிறுவனம் தரமான தலைக்கவசம் மற்றும் கையுறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

  • Share this:
தரமான தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனமான ஸ்டீல்பர்டு நிறுவனம், என்ஜின் ஆயில் மற்றும் கிரீஸ்களை தயாரித்து விற்பனையை தொடங்கியுள்ளது.

வாகன உதிரிபாகங்கள் மற்றும் தலைக்கவசங்கள் தயாரிக்கும் ஸ்டீல்பர்டு நிறுவனம் புதிய வகையான என்ஜின் ஆயில்கள் மற்றும் வாகன உயவுப் பொருளான கிரீஸ்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு வகையான டூவிலர்களுக்கு ஏற்ப என்ஜின் ஆயில்களை வகைப்படுத்தி சந்தையில் களமிறக்கியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்டீல்பர்டு நிறுவனம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமான என்ஜின் ஆயில்களை தங்கள் நிறுவனம் தயாரிப்பதாகவும், இந்திய சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விலைகளைப் பொறுத்தவரை 4டி என்ஜின் ஆயில் SAE 20W40 API SL, 900 மில்லி லிட்டர் 366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4T என்ஜின் ஆயில் SAE 20W40 API SL ஒரு லிட்டர் 394 ரூபாய்க்கும், SAE 15W50 API செமி சிந்தெடிக் 2.5 லிட்டர் 1075 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனவ் கபூர் ஸ்டீர்பேர்டு நிறுவனத்தின் ஆயில் விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது, ஆட்டோ மொபைல் துறையில் இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு தேவையான என்ஜின் ஆயில் மற்றும் கிரீஸ் தேவைகள் அதிகமாக இருப்பதாகவும், தரமான பொருட்களுக்கு டிமாண்ட் இருப்பதையும் தாங்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் என்ஜின் ஆயில்கள் மற்றும் லூபிரிக்கன்ட்ஸ் ஆயில், கிரீஸ் விற்பனைகளை தொடங்கியிருப்பதாக மனவ் கபூர் கூறியுள்ளார். ஆயில்களின் தரம் குறித்து விளக்கிய மனவ் கபூர், தங்கள் நிறுவனத்தின் ஆயில்கள் ஆர்டி பேக்கப்புடன் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு தரத்தை சோதித்திருப்பதாக கூறியுள்ளார். தேசிய மற்றும் உலகளாவிய வழிமுறைகளைப் பின்பற்றி தரமான முறையில் ஆயில்கள் தயாரிக்கப்படுவதாக கூறிய மனவ் கபூர், ஸ்டீல்பேர்டு அறிமுகப்படுத்தியுள்ள நியூ ரேஞ்ச் ஆயில்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Also read... 'ஃப்ளெக்ஸ் எரிபொருளுக்கு' வழிகாட்டுதல்கள்: மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருட்களைக் குறைக்க நடவடிக்கை!

ஸ்டீல்பர்டு நிறுவனம் தரமான தலைக்கவசம் மற்றும் கையுறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தரமான மற்றும் தனித்துவமான முகக் கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்தது. அந்த நிறுவனத்தின் முகக் கவசங்கள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் வரை விற்பனையாகின. மொபைல் போன்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முகக் கவசங்கள் மூலம் போன்களை தொடாமலேயே அழைப்புகளையும் பாடல்களையும் நிறுத்தும் வசதிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், குழந்தைகளுக்கான பிரத்யேகமாக முகக் கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்தது. புதிதாக என்ஜின் ஆயில் மற்றும் கிரீஸ்களை விற்பனையில் ஸ்டீல்பேர்டு களமிறங்கியுள்ளதால், இந்த பிரிவில் இருக்கும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி சூழல் ஏற்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: