Home /News /automobile /

26 வழித்தடங்களில் புதிய விமான சேவை - ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு

26 வழித்தடங்களில் புதிய விமான சேவை - ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு

காட்சி படம்

காட்சி படம்

ஜூலை 22 ஆம் தேதி முதல், இந்த சேவைகள் தொடங்கும் என்றும் டெல்லி, நாசிக், ஜம்மு, மும்பை உள்ளிட்ட பல வழித்தடங்களில் 26 விமான சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் மலிவு விலை விமானப் பயணத்தை சாத்தியமாக்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், கூடுதலாக புதிய விமான சேவைகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல், இந்த சேவைகள் தொடங்கும் என்றும், டெல்லி, நாசிக், ஜம்மு, மும்பை உள்ளிட்ட பல வழித்தடங்களில் 26 விமான சேவைகள் தொடங்கப்படும் என்று கூறியது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், பல நகரங்களுக்கு இதுவரை இல்லாத நேரடி விமானங்களும் இயக்கப் போகிறது. அவற்றில், டெல்லி – நாசிக் விமானம், ஹைதிராபாத் – ஜம்மு விமானம், மும்பை – கவுஹாத்தி விமானம், ஜர்சுகுடா – மதுரை விமானம், வாரனாசி – அகமதாபாத் விமானம் மற்றும் கொல்கத்தா – ஜபல்பூர் விமானம் ஆகியவை அடங்கும். அதாவது இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் நேரடி விமானம் இயக்கப்பட இருக்கிறது. இதனால், பெருநகரங்களில் மட்டுமல்லாமல், டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் வசிப்பவர்கள் கூட பயன்பெறுவார்கள்.

மேலும், டெல்லி, அம்ரிஸ்தர், அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்தது. இந்த புதிய வழித்தடங்களில், நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், Q400 விமானமும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.



also read : மொத்தமாக விடுப்பு எடுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள இண்டிகோ விமான நிறுவனம்.!

விமானப் போக்குவரத்தை குறைவான செலவில் பலரும் பயன்படுத்த உதவும் வகையில், உடான் திட்டத்தில் பங்கேற்றது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். உடான் திட்டம் என்பது சிறு நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமான சேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிதி சார்ந்த ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, உடான் விமான சேவைகளில் பயணக் கட்டணங்களை குறைவாக நிர்ணயிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

சில வாரங்களுக்கு முன்பு, கோடைகாலத்தை முன்னிட்டு, மார்ச் மாத இறுதியில் இருந்து, 50 புதிய விமான சேவைகளை தொடங்க இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் - கான்பூர், கோரக்பூர் - வாரணாசி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் - தர்மஸாலா (ஹிமாச்சல்) மற்றும் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி - ஷீரடி ஆகிய வழித்தடங்களில் 8 இண்டஸ்ட்ரி பர்ஸ்ட் வகை விமான சேவைகளை அறிமுகம் செய்தது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான சேவைகளில் 60 சேவைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக விமானங்கள் இயக்குவது, விமானப் போக்குவரத்தை விரிவாக்க பலரும் எளிதாகப் பயன்படுத்த உதவும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: SpiceJet

அடுத்த செய்தி