Home /News /automobile /

தென் கொரியாவின் முதலாவது மிதவை விமான நிலையம் - 2025க்குள் நிறைவு செய்ய திட்டம்!

தென் கொரியாவின் முதலாவது மிதவை விமான நிலையம் - 2025க்குள் நிறைவு செய்ய திட்டம்!

மிதவை விமான நிலையம்

மிதவை விமான நிலையம்

கடலில் விசாலமாக அமையும் இந்த விமான நிலையத்தின் மூலமாக 2065ஆம் ஆண்டில் 23.36 மில்லியன் பயணிகளையும், 2,86,000 டன் அளவிலான சரக்குகளையும் கையாள முடியும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது என்று தென் கொரிய அரசு தெரிவிக்கிறது.

தென் கொரியாவின் இரண்டாவது பெரும் நகரமாக பூசான் நகரம் இருக்கிறது. துறைமுக நகரமான இங்கு 2025ஆம் ஆண்டிற்குள் மிதவை விமான நிலையத்தை கட்டி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 10.97 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய அரசின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மிதவை விமான நிலையத்தை அமைப்பதற்காக கேடோக் தீவு பகுதியில் உள்ள 5 இடங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 5 இடங்களில் மிகப் பெரியதான பூஸான் தீவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியானது ஒலி மாசுபாடு இல்லாத இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் அருகாமையில் உள்ள ஜிம்ஹே மற்றும் ஜின்ஹே விமான நிலையங்களுக்கு அருகாமையில் இருப்பதால் விமான நெருக்கடி இருக்காது என்று கூறப்படுகிறது.

சுமார் 3,500 மீட்டர் தொலைவுக்கு ஓடுதளம் :

கடலில் மிதவை விமான நிலையமாக அமையும் இங்கு சுமார் 3,500 மீட்டர் தொலைக்கு ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்திற்கான விரிவான கட்டுமான திட்ட அறிக்கையை தயாரிக்க தென் கொரியா அரசு திட்டமிட்டுள்ளது.

மிதவை விமான நிலையத்தை 2025ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கவும், அதைத் தொடர்ந்து 2035ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வளவு பயணிகள், எவ்வளவு சரக்குகளை கையாளலாம்?

கடலில் விசாலமாக அமையும் இந்த விமான நிலையத்தின் மூலமாக 2065ஆம் ஆண்டில் 23.36 மில்லியன் பயணிகளையும், 2,86,000 டன் அளவிலான சரக்குகளையும் கையாள முடியும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது என்று தென் கொரிய அரசு தெரிவிக்கிறது.

திட்டத்திற்கு எதிர்ப்பு :

மிதவை விமான நிலையம் அமைக்கும் திட்டம் பொருளாதார ரீதியாக சாத்தியமானது அல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், சுற்றுச்சூழலை இது கடுமையாக பாதிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மற்றொரு புறம், இந்தத் திட்டம் உத்தேசிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

Also read... Yamaha: யமஹா FZ-S Fi பைக்கின் விலை, மைலேஜ் மற்றும் இதர அம்சங்கள் இதோ!

குறிப்பாக, தென் கொரியாவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள யோன் சூக்-யியோல், விமான நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளார். இதனால், கெடோக்கில் அமையும் சர்வதேச விமான நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று தற்போதைய அதிபர் மூன் ஜே-இன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: South Korea

அடுத்த செய்தி