முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / சும்மா தெறிக்கவிடும் அம்சங்கள்! சோனி நிறுவனத்தின் அதி நவீன எலக்ட்ரிக் கார்

சும்மா தெறிக்கவிடும் அம்சங்கள்! சோனி நிறுவனத்தின் அதி நவீன எலக்ட்ரிக் கார்

sony

sony

Sony Car | சோனி நிறுவனம் உலகம் முழுவதும் பொழுதுபோக்கு சாதனங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, எலக்ட்ரிக் கார் துறையில் காலடி வைப்பதன் மூலம், பெரிய அளவுக்கு கவனம் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகின் மிகப்பெரிய பிராண்டுகளில், ஒவ்வொரு நாட்டுக்கும் தனி இடம் மற்றும் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஜப்பான் நாட்டில் ஹோண்டா மற்றும் சோனி என்ற இரண்டு பெருநிறுவனங்களுமே தங்கள் துறையில் முன்னோடியாக இருப்பவர்கள். வெவ்வேறு துறையில் சாதனைகள் செய்து வரும் இந்த இரண்டு ஜாம்பவான்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் இணைந்து செயல்பட இருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில் சோனியுடன் ஹோண்டா நிறுவனம் கைகோர்த்து கூட்டு முயற்சியில் EV துறையில் காலடி பதிக்கிறது.

சோனி நிறுவனம் உலகம் முழுவதும் பொழுதுபோக்கு சாதனங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, எலக்ட்ரிக் கார் துறையில் காலடி வைப்பதன் மூலம், பெரிய அளவுக்கு கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, சோனியின் எலக்ட்ரிக் காரில் எத்தகைய பொழுது போக்கு சாதனங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் சோனி கார் ஆடியோ ஸ்ட்ரீம்கள், திரைப்படங்கள், வீடியோக்கள், வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ கேமிங் உள்ளிட்ட பல விதமான பொழுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய அதி நவீன உயர் தர மாடலாக இருக்கும். இந்த வசதிகளுக்காக மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி காரை வாங்குவார்கள் என்று சோனி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம், சோனி க்ரூப் கார்ப்பரேஷனுடன் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இருந்து இரு நிறுவனங்களும் ஜாயின்ட் வென்ச்சரில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.

சோனி நிறுவனத்தின் தலைவரான யோஷிதா கூறுகையில், ‘கார் பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிக் வாகன பிசினசாக மாறி வருகிறது. காரை புக் செய்யும் போதே, அது ஒரு டெக்னாலஜி புராடக்ட்டாக மாறிவிடுகிறது.’

மேலும், கார் மார்க்கெட் என்பது ஒரு சர்வீஸ் மாடலாக விரைவில் மாறும் என்றும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சாப்ட்வேர் டவுன்லோடு செய்வதற்கு மற்றும் பொழுபோக்கு அம்சங்களுக்கு பணம் செலுத்துவார்கள் என்றும் கூறினார்.

Also Read : இந்தியாவில் 2022ல் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இதோ!

EV உற்பத்தியில் பல்வேறு புதிய நிறுவனங்கள் தோன்றினாலும், அவர்களால் டெஸ்லா போன்ற வணிக ஜாம்பவான்களுடன் போட்டியிட முடியுமா என்று தெரியவில்லை. எனவே, ஜப்பானில் தலைசிறந்த மற்றும் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா மற்றும் சோனியின் கூட்டு முயற்சி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!

பிளேஸ்டேஷன், மியூசிக், என்று பொழுபோக்கு அம்சங்களில் உயர் தரமான சேவைகளை வழங்கி வரும் சோனி நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக் வாகனங்களில் ஆர்வம் இருப்பதாக கோடிட்டுக் காட்டியது. நுகர்வோர் மத்தியில் உயர்தர பொழுபோக்கு அம்சங்களுக்கு பெயர் பெற்ற சோனியின் மிகச்சிறந்த அனுபவம், நிபுணத்துவம், நெட்வொர்க், இமேஜிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றுடன் ஹோண்டாவின் தொழில்நுட்பம் மற்றும் மொபிலிட்டி வளர்ச்சியை இணைத்து புதிய தயாரிப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

First published:

Tags: Automobile, Honda, Sony