FASTag விற்பனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகள்...!

Fastag
- News18
- Last Updated: December 28, 2019, 4:17 PM IST
கனரக வாகனங்களுக்கு இலவசம் என்று விளம்பரத்துடன் பாஸ்டேக் விற்பனையில் சில ஏஜென்சிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றன.
டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த வகை செய்யும் பாஸ்டேக் அட்டையை அங்கீகரிக்கப்பட்ட 22 வங்கிகள் மற்றும் ஏர்டெல், பேடிஎம் போன்ற சேவை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்த நிறுவனத்திடம் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கினால் உங்களுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், அங்கீகாரம் இல்லாத ஒரு சில முகாம்களில் நீங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கும் போது ரூ. 200 முதல் ரூ. 300 வரை கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கான தொகையை உங்கள் பாஸ்டேக் அக்கவுண்டில் வரவு வைக்காமல் மீண்டும் நீங்கள் பாதுகாப்பு கட்டணமாக 250 கட்ட வேண்டும் அதன் பிறகே உங்கள் அக்கவுண்ட் வேலை செய்யும். இதனால் அங்கீகாரம் பெறாத நிறுவனத்தை தவிர்த்துவிட்டு நெடுஞ்சாலைத் துறை பரிந்துரைத்துள்ள இடத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்றால் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முடியும்.
இதேபோல பாஸ்டேக் ஸ்டிக்கர் கனரக வாகனங்களுக்கு இலவசமாக கிடைக்காது. இதைப்போல விளம்பரம் செய்தால் ஏமாற வேண்டாம். நீங்கள் பேடிஎம் மூலம் ஸ்டிக்கர் பெற்றால் பாஸ்டேக் ஸ்டிக்கருக்கு ரூ.100, பாஸ்டேக் மினிமம் ரூ. 150, திரும்பப் பெறக்கூடிய பாதுகாப்பு கட்டணம் (Security refund money) ரூ.250 என மொத்தம் ரூ.500 வசூல் செய்யப்படும்.
அங்கீகாரம் பெற்ற வங்கிகளிடம் போதிய ஸ்டிக்கர் இல்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டும் நிலையில்அங்கீகாரம் இல்லாத நிறுவனத்திடம் எவ்வாறு ஸ்டிக்கர் செல்கிறது என நெடுஞ்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த வகை செய்யும் பாஸ்டேக் அட்டையை அங்கீகரிக்கப்பட்ட 22 வங்கிகள் மற்றும் ஏர்டெல், பேடிஎம் போன்ற சேவை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்த நிறுவனத்திடம் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கினால் உங்களுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், அங்கீகாரம் இல்லாத ஒரு சில முகாம்களில் நீங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கும் போது ரூ. 200 முதல் ரூ. 300 வரை கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது.