Home /News /automobile /

குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Snow+ஐ அறிமுகப்படுத்திய Crayon Motors - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Snow+ஐ அறிமுகப்படுத்திய Crayon Motors - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Snow+

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Snow+

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது நாட்டில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், பீகார் போன்ற பகுதிகளில் சுமார் 100 ரீட்டெயில் லொக்கேஷன்களில் இடங்களில் கிடைக்கிறது.

ஸ்டார்ட்அப் எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான க்ரேயான் மோட்டார்ஸ் (Crayon Motors) குறைந்த வேக எலெக்ட்ரிக் டூவீலரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய வாடிகையாளர்களுக்காக தனது லோ ஸ்பீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஸ்னோ+ (Snow+) வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனம். இந்த புதிய Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ரூ.64,000 முதல் கிடைக்கும் மேலும் ஃபையரி ரெட், சன்ஷைன் எல்லோ, கிளாசிக் கிரே மற்றும் சூப்பர் வொயிட் உள்ளிட்ட 4 கலர் ஆஃப்ஷன்களில் விற்கப்படும் என்றும் க்ரேயான் மோட்டார்ஸ் அறிவித்து உள்ளது.

க்ரேயான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனரான மயங்க் ஜெயின் கூறுகையில், இந்திய சந்தைகளில் Snow+ எலெக்ட்ரிக் டூ வீலர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் குறைந்த வேக எலெக்ட்ரிக்-ஸ்கூட்டர்களுடன் தொடங்கி அதிவேக எலெக்ட்ரிக்-ஸ்கூட்டர் தயாரிப்பை நோக்கி முன்னேறி வருகிறோம். குறைந்த வேக எலெக்ட்ரிக்-ஸ்கூட்டர்கள் நகரத்திற்குள் தொடர்ந்து பயணிக்கும் ரைடர்களின் தினசரி பயணங்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக இருக்கும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எங்களது இந்த குறைந்த வேக எலெக்ட்ரிக்-ஸ்கூட்டர்கள் பூர்த்தி செய்யும். மேலும் இது அவர்களுக்கு குறைந்த செலவு மற்றும் இனிமையான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறினார். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது நாட்டில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், பீகார் போன்ற பகுதிகளில் சுமார் 100 ரீட்டெயில் லொக்கேஷன்களில் இடங்களில் கிடைக்கிறது என்று க்ரேயான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள்:

* இந்த Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 2 வருட வாரண்டியுடன் வருகிறது

* Snow+ டூ வீலரானது லைட் மொபிலிட்டி தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

* இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். இதை சாலைகளில் ஓட்டி செல்வதற்கு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டூ- வீலரை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தேவையில்லை.

* இந்த ஸ்கூட்டர் அதிக திறன் கொண்ட 250-வாட் பிஎல்டிசி மோட்டாருடன் (250-Watt BLDC motor) வருகிறது. இது ஸ்கூட்டரை அதன் உச்ச வேகத்தில் பயணம் செய்வதற்கான பீக் பவரை வழங்குகிறது.

Also read... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட AMO Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

* டியூப்லெஸ் டயர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டர், சமதளம் நிறைந்த சாலைகளில் ஸ்ட்ரெஸ்-ஃபிரீ சவாரிகளுக்கு 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை உறுதி செய்கிறது.

* மேலும் இந்த Snow+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சென்ட்ரல் லாக்கிங், மொபைலுக்கான USB சார்ஜிங், ஆண்டி-தெஃப்ட் மற்றும் நேவிகேஷன் (GPS) போன்ற பல கூடுதல் அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

* இது ஒரு பெரிய பூட் ஸ்பேஸை கொண்டு வருகிறது, எனவே லாஸ்ட் மைல் டெலிவரி அப்ளிகேஷன்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

பல வகையான நிதியளிப்பு மாற்றுகளை வழங்க பஜாஜ் ஃபின்சர்வ், மணப்புரம் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட், கோடக் மகிந்திரா வங்கி, ஜெஸ்ட் மணி, ஷாப்ஸே மற்றும் பேடெயில் உள்ளிட்ட முன்னணி நிதி நிறுவனங்களுடன் க்ரேயன் மோட்டார்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி