புதிய காரை அறிமுகம் செய்த ஸ்கோடா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்கோடா கரோக்

ஸ்கோடா நிறுவனம் புதிய எஸ்.யூ.வி. ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கரோக் எஸ்.யூ.வி. காரை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்த ஸ்கோடா நிறுவனம், அதற்கான முன்பதிவை கடந்த ஆண்டே தொடங்கியது.

  இதையடுத்து, மே 6-ம் தேதி வாடிக்கையாளர்களிடம் கார் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் அறிமுகம் கூட செய்ய முடியாத நிலை உருவானது.

  இந்நிலையில், சமூகவலைதளம் மூலம் கரோக் காரை அறிமுகம் செய்த ஸ்கோடா நிறுவனம், இதன் விலை 25 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. ஏர் பேக், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்பட பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த கார் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: