மண்ணில் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அதேசமயம், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக, ஆபத்துகளை சற்று குறைக்கலாம் என்ற குரலும் வலுத்து வருகிறது. பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து கட்டமைக்கப்படும் தார் சாலைகள் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. அதே போல பிளாஸ்டிக் பொருட்களை வேறு எதற்காக எல்லாம் பயன்படுத்தலாம் என்ற கேள்விக்கு மற்றுமொரு விடை கிடைத்துள்ளது.
தற்போது அடுத்தகட்ட முயற்சியாக பொருள்களை உற்பத்தி செய்யும் பணிகளிலும் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புது கார்களை வடிவமைக்கும்போது மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பலவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை கார் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கான சமீபத்திய உதாரணம், ஸ்கோடா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான எனியாக் ஐ5 காரில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கம்பளி ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கார்களுக்கான உற்பத்தியில் பல்வேறு புதிய பொருட்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் ஆகியோருடன் ஸ்கோடா நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.
Also Read : டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
செக் குடியரசு நாட்டை தலைமையகமாக கொண்ட ஸ்கோடா நிறுவனம், கார் தயாரிப்பில் பல புதுமையான உத்திகளை அறிமுகம் செய்து வருகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கி, அதை உருக்கி, அதன் பிறகு அவற்றை துகள்களாக மாற்றுகின்றனர். இந்த துகள்களைக் கொண்டு பின்னர் தயாரிக்கப்படும் நூலானது வலுவான ஃபேப்ரிக் துணிக்கு அடிப்படையான மூலப் பொருளாக அமைகிறது.
Also Read : குளோபல் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற இந்திய கார்கள்
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சப்ளையர் நிறுவனமான சேஜ் ஆட்டோமேட்டிக் இன்டீரியர் என்ற நிறுவனத்துடன் ஸ்கோடா நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த சேஜ் நிறுவனமானது கார் உள்ளே இன்டீரியர் வேலைப்பாடுகளை மேம்படுத்துவதில் பல்வேறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு உற்பத்தியாளர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை இன்டீரியர் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையை மெல்ல, மெல்ல மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமானது 100% மறுசுழற்சி செய்யப்பட்ட எகோனில் நைலான் பொருட்களை கொண்டு கார் உற்பத்தியை மேற்கொள்கிறது.
Also Read : அட்டகாசமான தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா நிறுவனம்!
இந்த நிறுவனம் சார்பில் அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களில், நிலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் அல்லது கடலில் பயன்படுத்தப்பட்ட பழைய மீன்பிடி வலைகள் போன்றவற்றைக் கொண்டு இன்டீரியர் வடிவமைப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதேபோன்று, கார் உள்ளே விரிக்கப்படும் தரை விரிப்புகள் மற்றும் மேற்கூரை ஆகிய பகுதிகளிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை ஜாகுவார் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.