• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா - ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா - ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

 ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், ஸ்லாவியா முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்த வாகனம், 2022 ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    செக் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது புதிய செடானை இந்திய சந்தையில் கடந்த வியாழன் அன்று அறிமுகப்படுத்தியது. ஸ்கோடாவின் 'Strategy 2030' திட்டத்துக்கும், உலக அளவில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்கு இந்த செடான் முக்கியமான அறிமுகமாக கருதப்படுகிறது.

    இந்த புதிய செடான், இந்தியா மற்றும் செக் குடியரசு ஆகிய இரண்டு நாடுகளின் பிரதிநிதியாக, ஸ்கோடா ஆட்டோவின் பிரத்யேகமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்ற மாற்றங்களோடு MQB A0 IN தளத்தில், ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் பிராண்டில் தலா ஒரு வாகனத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    “இந்திய ஆட்டோமொபைல் சந்தை மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு, எங்கள் வோக்ஸ்வேகன் குழுவின் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம். ஸ்கோடா ஆட்டோ முயற்சிகள் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வரை இந்தியாவிற்கு ஏற்றவாறு வாகன உற்பத்தியை அமைத்துள்ளது. இப்போது, இந்தியாவில் எங்களின் புத்தம் புதிய செடானான ஸ்கோடா ஸ்லாவியாவை அறிமுகப்படுத்தி, இந்தியா 2.0 தயாரிப்பு கேம்பைனில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஸ்கோடா ஆட்டோ தலைமை செயல் அதிகாரியான தாமஸ் ஸ்சாஃபர் தெரிவித்தார்.



    சில நாட்களுக்கு முன்பு தான் ஜப்பானிய கார் உற்பத்தியாளரான டொயோட்டா நிறுவனம் தனது புதிய செடான் பெல்டாவை உறுதி செய்துள்ளது. டொயோட்டா பெல்டா மாருதி சுசுகி சியாஸின் நகல் என்று அறிக்கைகள் வெளியாகின. தற்போது, புதிய ஸ்கோடாவின் செடான் களத்தில் புதிய போட்டியாக இறங்கியுள்ளது. ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் வெர்னா ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக இருக்கக்கூடும்.



    “குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஐரோப்பிய கார் உற்பத்தியாளராக ஸ்கோடா ஆட்டோ இருக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள்” என்றும் அவர் கூறினார். ஸ்கோடா ஸ்லாவியா செடான் இந்திய வோக்ஸ்வேகன் 2.0 திட்டத்தின் இரண்டாவது அறிமுகம். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்திய நடுத்தர-அளவு செடான் குஷாக், இந்தியா 2.0 திட்டத்தின் நான்கு வாகனங்களின் முதல் அறிமுகம்.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஸ்கோடா ஸ்லாவியா மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று செடான் பற்றிய அறிமுகத்தில் கூறப்பட்டது. 115 PS பவர் கொண்ட 1-லிட்டர் மூன்று சிலிண்டர் மற்றும் 150 PS பவர் கொண்ட 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்று ஸ்லாவியா இரண்டு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. அடிப்படையாக ஆறு-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வந்தாலும், ஆறு-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏழு-ஸ்பீட் DSG ஆகிய தேர்வுகளை ஆப்ஷனலாக தருகிறது.

    ALSO READ |  மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக "E-Amrit" போர்ட்டலை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு!

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், ஸ்லாவியா முன்பதிவை தொடங்கியுள்ளது. நீங்கள் பேமெண்ட் ஆக செலுத்தி, முன்பதிவு செய்யலாம். இந்த வாகனம், 2022 ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: