முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / Simple Energy நிறுவனத்தின் 2-வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியீடு

Simple Energy நிறுவனத்தின் 2-வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியீடு

காட்சி படம்

காட்சி படம்

புக்கிங் செய்துள்ளவர்களுக்கு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி ஜூன் 2022-ல் தொடங்க உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் நாடும் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், மக்களின் கவனம்  எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தொடர்ந்து திரும்பி வருகிறது.கடந்த 2021, ஆகஸ்ட் 15 அன்று ஓலா நிறுவனத்தின் எஸ்1 & எஸ்1 ப்ரோ மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

டிசம்பர் முதல் ஓலா தனது ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கியது. ஆனால் பல நுகர்வோர் ஓலா ஸ்கூட்டர்களின் அம்சங்கள் மற்றும் தரம் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு ஆளாகாமல் இருக்க பெங்களூரை தளமாகக் கொண்ட எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான Simple Energy, வாகனத்தை மேலும் மேம்படுத்திய பிறகு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. புக்கிங் செய்துள்ளவர்களுக்கு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Simple One electric scooter) டெலிவரி ஜூன் 2022-ல் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2021-ல் அறிமுகமானதிலிருந்து கடந்த சில மாதங்களில் இந்த ஸ்கூட்டர் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் பேசுகையில், ஜூன் 2022-ல் ONE ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் சமயத்தில் தங்களது நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். எங்களது one எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ள இரண்டாவது ஸ்கூட்டர், தற்போதைய செயல்திறன் சார்ந்த One இ-ஸ்கூட்டரை விட இது மிகவும் மலிவான ஸ்கூட்டராக இருக்கும் என்று கூறி உள்ளார் சிம்பிள் எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார்.

மேலும் பேசிய சுஹாஸ், விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் புதிய ஸ்கூட்டர் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் மற்றும் தற்போதுள்ள ONE ஸ்கூட்டரின் நீட்டிப்பாக இருக்காது. இது ஒரு புதிய பிளாட்ஃபார்ம் மற்றும் ஒரு சிறிய பேட்டரி மற்றும் மோட்டாரை கொண்டிருக்கும். வரவிருக்கும் ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் விவரங்களை சுஹாஸ் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், தற்போதுள்ள சந்தை போட்டியாளர்களின் தயாரிப்புகளை விட மிகவும் விலை மலிவு மற்றும் போட்டித்தன்மை கொண்டதாக புதிய ஸ்கூட்டர் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

also read : நாட்டிலேயே 2வது பெரிய எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனை நிறுவனமாக மாறிய OLA Electric.!

எல்லோரும் செயல்திறன் மிக்க இ ஸ்கூட்டரை விரும்புவதில்லை. எனவே எங்களது புதிய தயாரிப்பு அந்த வகை மக்களை இலக்காக கொள்ளும் என்று மேலும் கூறினார். சிம்பிள் எனர்ஜியின் இரண்டாவது ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படலாம். அது இந்த ஆண்டு இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமான C4V உடன், இந்தியாவில் லித்தியம்-அயன் செல் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை (lithium-ion cell manufacturing ecosystem) அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Electric bike