ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Auto Expo 2023: ”காரை ஃப்ரியா எடுத்துட்டுப்போக போறேன்” ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த ஷாருக்கான்..! வைரலாகும் பதிவு..!

Auto Expo 2023: ”காரை ஃப்ரியா எடுத்துட்டுப்போக போறேன்” ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த ஷாருக்கான்..! வைரலாகும் பதிவு..!

காரை அறிமுகம் செய்யும் ஷாருக்கான்

காரை அறிமுகம் செய்யும் ஷாருக்கான்

ஷாருக் கானின் 25 வருட திரைப் பயணத்தை கவுரவிக்கும் வகையில் தங்கள் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்….

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வாகன கண்காட்சி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி 18-ம்  தேதி வரை நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வாகன கண்காட்சிகளுள் ஒன்றாக இந்திய வாகன கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கணக்காட்சியில் சர்வதேச மற்றும் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல் கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகம் செய்யும். கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்த பொருளதார நெருக்கடிகளால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவில்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ தொடங்கி உள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பல முன்னனி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில் தென்காரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்  இந்த ஆட்டோ எக்ஸ்போவில் தங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளனர். அதில் ஒன்றுதான ஹூண்டாய் நிறுவனத்தின் IONIQ 5. அந்தக் காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் அறிமுகம் செய்து வைத்தார்.

முதல் இரண்டு நாட்கள் ஊடகங்கள் மற்றும் விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 13 ஆம் தேதி அலுவல் ரீதியான கண்காட்சி தொடங்குகிறது. 14-ம் தேதி முதல் வாகன கண்காட்சியை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வாகனங்களை பார்வையிட ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று ஷாருக் கான் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை தந்தார். ஹூண்டாய் அரங்கிற்குச் சென்ற அவர் ஹூண்டாய் இயோனிக் 5 –எலக்ட்ரிக் கார் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அந்தக் காரை ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் காருடன் ஷாருக் கான் நிற்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. காரை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக், தான் எப்போது டெல்லிக்கு வந்தாலும், ஒரு ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை இலவசமாக எடுத்துச்செல்வதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் மாருதி சுசுகி, மஹிந்திரா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், எம்ஜி, கியா, டொயோட்டா, லெக்சஸ் மற்றும் நிசான் உள்ளிட்ட முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களும், முன்னனி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளனர். ஏராளமான புது வரவுகளோடு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியுள்ள ஆட்டோ எக்ஸ்போ களைகட்டும் என்பதில ஐயமில்லை.

First published:

Tags: Automobile, Hyundai, Shah rukh khan, Tamil News