Home /News /automobile /

Hyundai கார்களுக்கு ரூ.50,000 வரை சூப்பரான ஆஃபர்!

Hyundai கார்களுக்கு ரூ.50,000 வரை சூப்பரான ஆஃபர்!

ஹூண்டாய் நிறுவனம்

ஹூண்டாய் நிறுவனம்

Hyundai : ஹூண்டாய் நிறுவன தயாரிப்பில் மிக அதிகப்படியாக விற்பனையாகி வரும் சாண்ட்ரோ காரில் புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பிப்ரவரி மாதம் முடிவுக்கு வர இருக்கும் சூழலில், பல்வேறு கார்களுக்கு மிகுந்த கவர்ச்சிகரமான சலுகைகளை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் டாடா மற்றும் ஹோண்டா போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், அதன் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சியான சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் போட்டியிடும் வகையில், சந்தையில் பிஸ்னெஸ்-ஐ மேம்படுத்தும் வகையிலும் ஹூண்டாய் நிறுவனம் ஆஃபர்களை வழங்குகிறது.

ஐ20, ஆரா, சாண்ட்ரோ மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற கார்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் ஆஃபர்களை வழங்கி வருகிறது. உங்களுக்கான ஆஃபர்கள் ரூ.50,000 வரையிலும் கிடைக்கும். இதில், நீங்கள் எக்ஸேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் மற்றும் கேஷ் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளை பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், இந்த ஆஃபர்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் முந்திக் கொள்ள வேண்டும். அதாவது ஆஃபர்களை பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு வழங்கப்படும் ஆஃபர் விவரம்

ஹூண்டாய் நிறுவன தயாரிப்பில் மிக அதிகப்படியாக விற்பனையாகி வரும் சாண்ட்ரோ காரில் புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த பிப்ரவரி மாதத்தில் அந்த காருக்கான டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது. ஹூண்டா சாண்ட்ரோ கார் வாங்குகையில் நீங்கள் ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட் பெற முடியும். ஆனால், 5 சீட்டர் கொண்ட பெட்ரோல் வேரியண்ட் காருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாண்ட்ரோ காரின் சிஎன்ஜி வேரியண்ட் காருக்கு எந்தவித ஆஃபரும் வழங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள் :  ரூ.50,000 வரை டிஸ்கவுண்டில் வழங்கப்படும் ஹூண்டாய் கார்கள் - ஆஃப்ர் பெற முந்துங்கள்

அதிகப்படியான ஆஃபர்களை கொண்ட ஐ10 நியோஸ், ஆரா…

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா போன்ற கார்களுக்கு மிக அதிகப்படியான ஆஃபர் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த வகை கார்களை வாங்கும்போது ரூ.50,000 வரை டிஸ்கவுண்ட் பெற முடியும். ஆரா மற்றும் ஐ10 நியோஸ் ஆகிய கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் கார்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிஎன்ஜி வேரியண்ட் காருக்கு இந்த ஆஃபர் பொருந்தாது.

இதையும் படியுங்கள் :  2022 மாருதி சுசுகி பலேனோ காருக்கான புக்கிங் தொடங்கியாச்சி... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

அபினா ஐ20 காருக்கு எவ்வளவு ஆஃபர்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு உரிய ஹூண்டாய் ஐ20 காருக்கு ரூ.40 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிக்கப்படுகிறது. எக்ஸேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் மற்றும் கேஷ் டிஸ்கவுண்ட் போன்ற ஆஃபர்களை நீங்கள் பெறலாம். நீங்கள் டீசல் அல்லது பெட்ரோல் என எந்த வேரியண்ட் கார் வாங்கினாலும் உங்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்கும். தற்போதைய சூழலில் ஐ20 காரின் தொடக்க விலை ரூ.6.98 லட்சமாக உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hyundai

அடுத்த செய்தி