புதிய கார் வாங்கும்போது இலவச பதிவுக் கட்டணம் பெற வேண்டுமா?

தற்போதைய சட்டத்தின்படி பழைய வாகனங்களை 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் உபயோகிக்க வேண்டுமானால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.

புதிய கார் வாங்கும்போது இலவச பதிவுக் கட்டணம் பெற வேண்டுமா?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 29, 2019, 3:18 PM IST
  • Share this:
ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அந்தக் காரை மறுசுழற்சிக்குத் தந்தால் புதிதாக வாங்கும் காருக்குப் பதிவுக்கட்டணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் ஆயுட்காலம் முடிந்த பின்னரும் அதைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதிக்கும். இதனால், பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால் அது நாட்டுக்குப் பெரிதும் உதவும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாக இருந்தால் அதன் பின்னர் அதை மறு பதிவு செய்து உபயோகிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்குப் பதிலாகப் பழைய காரை மறுசுழற்சிக்குத் தந்துவிட்டால் புதிய காருக்கான பதிவுக் கட்டணத்தை இலவசமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது அரசு.


தற்போதைய சட்டத்தின்படி பழைய வாகனங்களை 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் உபயோகிக்க வேண்டுமானால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமும் கடுமையாகவே உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 2020-ல் இந்தியாவுக்கு டெஸ்லா வரலாம் - சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு எலான் மஸ்க் பதில்!
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading