ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்தராது : கேடிஎம் தலைவர் அதிர்ச்சி தகவல்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்தராது : கேடிஎம் தலைவர் அதிர்ச்சி தகவல்

KTM

KTM

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பற்றி மிக அதிக அளவில் மிகபடுத்தபட்டு வருவதாக ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனமான கே டி எம் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது உலகம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு பல்வேறு நாடுகளில் அரசாங்கம் தங்களது நாட்டு மக்களுக்கு பரிந்துரைகள் செய்து வருகின்றன. அதிலும் இந்தியாவில் சமீப காலமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன மேலும் பல்வேறு மக்களும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகரித்து வரும் எரிபொருள் விலையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பற்றி மிக அதிக அளவில் மிகபடுத்தபட்டு வருவதாக ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனமான கே டி எம் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

உலகில் நம்பர் ஒன் ப்ரீமியம் மோட்டார் பைக் பிராண்ட் எனக் கூறிக்கொள்ளும் கேடிஎம் சமீபத்தில் ஐரோப்பாவில் மட்டும் பல நூறு கணக்கான மின்சாரத்தில் இயங்கும் பைக்குகளை விற்று தீர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பற்றிய நம்பிக்கை இன்னும் முழுவதுமாக ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். கேடிஎம் நிறுவனமானது அதிக அளவில் உயர்தர ரேசிங் பைக்குகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. 50.1:49.9 என்ற அளவில் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து பைக்குகளை தயாரித்து வருகிறது. மேலும் பஜாஜ் உடன் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்களையும் 2024ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் விற்பனை செய்ய உள்ளது.

இந்த சமயத்தில்தான் கேடிஎம் நிறுவனத்தின் தலைவர் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பற்றிய மதிப்பீடுகள் மிக அதிக அளவில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இயற்பியலின் விதிகளை தவறாக கணக்குப் போட்டதினாலும், ஆற்றலின் விதிகளை தவறாக படித்ததினாலும் இந்த பிரச்சனையும் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மோட்டார் பைக் என்பது முடிந்த அளவு தயாரிப்பின் போதே இட நெருக்கடியை குறைக்கும் வகையில் கட்டமைக்கப் பட வேண்டும். ஆனால் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களில் அதிக அளவு எடை கொண்ட பேட்டரிகளை இவை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.. இந்த காரணத்தினால் தான் ஸ்போர்ட்ஸ் அல்லது உயர்தர பைக்குகளை மின்சாரத்தில் இயங்கும் வடிவமைக்கும் பட்சத்தில் அவற்றின் செயல் திறனில் பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிக திறன் வாய்ந்த பைக்குகளில் எலக்ட்ரிக் எஞ்சின்களை பயன்படுத்தி இயங்க வைப்பது சரியான விஷயம் அல்ல. மின்சாரத்தில் இயங்கும் என்ஜின் ஆனது எரிபொருள் பயன்படுத்தி இயங்கும் என்ஜினைப் போல் ஆற்றலை உற்பத்தி செய்ய மிக அதிக சக்தியை செலவழிக்க வேண்டி இருக்கும். மேலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் நிலையிலும் மிக அதிகமாக இருக்கின்றன. சமீபத்தில் அரசாங்கத்தின் பல்வேறு அறிவிப்புகளினால் லித்தியம்-அயனில் இயங்கும் பேட்டரியின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை அனைத்தையும் அரசியல்வாதிகளுக்கு நம்மால் முழுவதுமாக விளக்கி புரிய வைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Automobile