பாட்டு கேட்கலாம்... ஃபோன் பேசலாம்...!- Steelbird அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் ஹெல்மெட்

பேட்டரி இல்லா இந்த ஹெல்மட்டை AUX வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் உடன் இணைத்துக்கொள்ளலாம்.

Web Desk | news18
Updated: January 17, 2019, 2:15 PM IST
பாட்டு கேட்கலாம்... ஃபோன் பேசலாம்...!- Steelbird அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் ஹெல்மெட்
ஹெல்மெட்
Web Desk | news18
Updated: January 17, 2019, 2:15 PM IST
Steelbird நிறுவனம் புதிதாக SBA-1 HF ஹெல்மெட் அறிமுகப்படுத்தி உள்ளது. 2,589 ரூபாய் மதிப்புள்ள இந்த ஹெல்மெட் பிரத்யேகமாக இரண்டு ஆண்டுகள் நடந்த சீரிய ஆய்வில் முடிவாக வெளிவந்துள்ளது.

பைக் ஓட்டும்போது பாட்டுக் கேட்கவும் ஃபோன் பேசவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி இல்லா இந்த ஹெல்மட்டை AUX வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் உடன் இணைத்துக்கொள்ளலாம். சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது. ஹெல்மெட் சைஸ் 58 செ.மீ முதல் 60 செ.மீ வரையில் உள்ளது.

கனெக்ட் மற்றும் டிஸ்கனெக்ட் செய்ய வசதியாக பட்டன், கூகுள் அசிஸ்டென்ட் வசதி, உயர் சத்தம் நீக்கும் வகையிலும் ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராஃபிக் சமயங்களில் ஃபோன் பேசினால் சத்தம் இடையூறு இல்லாமல் பேசுவதற்கு ஏதுவாக ஹெல்மெட் உடன் சிறு மைக் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: பொங்கலை முன்னிட்டு கோயம்புத்தூரில் தமிழர் திருவிழா! ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
First published: January 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...