Home /News /automobile /

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது கார் பாதுகாப்பு ரேட்டிங்.. எப்படி செயல்படும் தெரியுமா.? 

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது கார் பாதுகாப்பு ரேட்டிங்.. எப்படி செயல்படும் தெரியுமா.? 

காட்சி படம்

காட்சி படம்

Nitin Gadkari | இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங்கை விரைவில் கொண்டு வர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சாலை விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கும் முயற்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகள் ஹெல்மேட் அணிவது கட்டாயம் போன்ற பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

    இதனிடையே நாட்டில் சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற, இந்திய அரசு பயணிகள் கார்களுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பாரத் என்சிஏபி(Bharat-NCAP) என்ற பெயரில் இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங் அதாவது பாதுகாப்பு ரேட்டிங் தொடர்பான வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த புதிய முறையானது ஏப்ரல் 2023ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களின் ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கார் பாதுகாப்பு ரேட்டிங் எவ்வாறு செயல்படும்?

    சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாரத் என்சிஏபி (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) அறிமுகப்படுத்துவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல்களுக்கு ஒன்று முதல் பைவ் ஸ்டார் வரை ரேட்டிங்குகள் வழங்கப்படும்.



    மத்திய அமைச்சகம் சொல்வது என்ன?

    சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், பாரத் என்சிஏபி திட்டமானது வாடிக்கையாளர்கள் ஸ்டார் ரேட்டிங்கை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பான கார்களை தேர்வு செய்ய உதவும். அதேநேரத்தில் பாதுகாப்பான கார்களை தயாரிக்க இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் ஊக்குவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.



    இத்திட்டம் கார்களின் கட்டமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, இந்திய கார்களின் ஏற்றுமதி தரத்தை அதிகரிப்பதற்கும் கிராஷ் டெஸ்ட்கள் அடிப்படையில் ஸ்டார் ரேட்டிங் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்தியச் சாலைகளில்ஓடும் கார்கள் பெரும்பாலும் சர்வதேச என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் முறைப்படிதான் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவுக்கென தனியாக பாதுகாப்பு ரேட்டிங் முறை ஏதும் இல்லை. இந்தியச் சாலைகளுக்கு ஏற்றார்போல், பாதுகாப்பு ரேட்டிங் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Also Read : Electric Vehicle வாங்கினால், வரி விலக்கு பெறலாம் – வருமான வரிச்சட்டத்தில் புதிய பிரிவு

    இந்தியாவை உலகின் நம்பர் 1 ஆட்டோமொபைல் மையமாக மாற்றும் நோக்கத்துடன் நமது ஆட்டோமொபைல் துறையை ஆத்மநிர்பராக்குவதில் பாரத் என்சிஏபி ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்றும் கட்கரி உறுதியளித்துள்ளார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, India, Nitin Gadkari

    அடுத்த செய்தி