ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

தீவிரமடையும் போர்; ரஷ்யாவில் இருந்து வெளியேறியது மெர்சிடிஸ் பென்ஸ் - பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா?

தீவிரமடையும் போர்; ரஷ்யாவில் இருந்து வெளியேறியது மெர்சிடிஸ் பென்ஸ் - பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா?

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

Russia - Ukraine War : ரஷ்யா- உக்ரைன் போர் நீடிக்கும் காரணத்தினால் ஆடம்பர கார் தாயரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • internatio, IndiaRussia Russia

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் அதனை எதிர்த்துத் தாக்குதல் நடத்தியதில் தற்போது இருநாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலகின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ரஷ்யாவில் உற்பத்தியை நிறுத்தி விட்டு அங்கு இருந்து வெளியேறியுள்ளது

உக்ரைன் மேல் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்துப் பல நாடுகளில் நிறுவனங்கள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கை எடுத்து வந்தனர். குறிப்பாக, கணினி தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட குளோபல் நிறுவனங்கள் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புக்களை வெளியிட்டனர். தற்போது இருநாடுகளுக்கு இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில். உலகின் மிகப்பெரிய ஆடம்பர ஆட்டோமொபைல் பிராண்ட் ஆன மெர்சிடிஸ் பென்ஸ் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது.

ஏற்கனவே நிஸான், ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே அசாமிலிருந்து ரஷ்யாவில் தங்களுடைய சேவைகளை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மானிய லக்சுரி ஆட்டோமேக்கர், மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த புதன்கிழமையன்று ரஷ்யா ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகத் தெரிவித்தது. நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரைக் காரணம் காட்டி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியானது.

ரஷ்யாவில் இருக்கும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக முடிவு செய்துள்ளதாகவும் வெளியான அறிக்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் உள்ளூர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான காமாஸ் என்ற நிறுவனத்துடன் பென்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளது. எனவே பென்ஸ் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறினாலும் அது பாதிக்காது. பென்ஸ் நிறுவனம் தன்னுடைய தொழில்துறை மற்றும் நிதி சேவைகளை உள்ளூர் முதலீட்டாளர்களுக்குப் பரிமாற்றம் செய்யக் கொடுப்பதாக முடிவு செய்துள்ளது என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தரப்பு கூறியது. அதுமட்டுமல்லாமல் டால்மேயர் என்ற நிறுவனத்தைத் தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read : சோமாலியாவில் சக்தி வாய்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு- ஊடகவியலாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பலி!

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஜப்பான் உற்பத்தியாளரான நிசான் மோட்டார் நிறுவனமும் ரஷ்யாவில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால் இது தற்காலிகமானது என்பதைக் கூறி, ஆறு ஆண்டுகளில் மீண்டும் தொடங்க திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தது.

நிஸ்ஸான் நிறுவனம் வெளியேறும் பொழுது ரஷ்யாவிலிருந்து 100 மில்லியன் யென் தொகைக்குச் சமமாக ரஷ்யாவிற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

தற்போது மெர்சிடிஸ் நிறுவனம் முழுவதுமாக வெளியேறிய நிலையில், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Janvi
First published:

Tags: Mercedes benz, Russia, Russia - Ukraine