மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வாகனம் ஓட்டும்போது சரியான உடையை அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா.? ஆம், இந்தியாவிலும் பலராலும் அறியப்படாத சில விசித்திரமான போக்குவரத்து விதிகள் உள்ளன. அதனைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு மீறல்களை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. இதை செயல்படுத்துவதற்காக வாகன உற்பத்தி வழிகாட்டுதல்கள் மற்றும் பிற அம்சங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனைப் பற்றி கடந்த சில நாட்களாகவே பல செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால் இந்தியாவில் பலருக்கும் அதிகம் தெரியாத சில போக்குவரத்து விதிகள் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மேட் கட்டாயம், கார் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என பொதுவான விதிகள் குறித்து பலரும் அறிந்திருப்போம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவின் போக்குவரத்து சட்டத்தின் படி, நீங்கள் செருப்பு அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதி இல்லை. உடனே அதிர்ச்சி அடைய வேண்டாம்... இதை எல்லாம் விடவும் நமது இந்தியாவில் பல வித்தியாசமான போக்குவரத்து விதிகள் உள்ளன. அதைப் பற்றி கீழே விரிவாக விளக்கியுள்ளோம்.
'செப்பல்' உடன் சவாரி செய்தால் அபராதம்:
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தியாவில் சவாரி செய்யும் போது அல்லது வாகனம் ஓட்டும் போது நீங்கள் அதற்குரிய சரியான உடைகளை அணிய வேண்டும். விதிகளின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும்போது முழுமையாக மூடிய காலணிகளை அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் செப்பல் அல்லது செருப்பு அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது. இந்த விஷயத்தில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், வாகனம் ஓட்டும் போது, பின்னால் அமர்ந்திருப்பவர் முழு நீள கால்சட்டையுடன் கூடிய சட்டை அல்லது டி-சர்ட்டை அணிய வேண்டும். இல்லையெல் அவர்களுக்கு ரூ 2,000 அபராதம் விதிக்கப்படலாம்.
இரண்டு ஓட்டுநர் உரிமங்கள்:
ஒரு நபரிடம் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் பழைய ஓட்டுநர் உரிமம் மற்றும் புதிய உரிமம் ஒன்று உங்களிடம் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஒரே நபர் பெயரில் இரண்டு லைசென்ஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டால், இது பெரும் போக்குவரத்து விதிமீறலாக கருதப்பட்டு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
Also Read : இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை
வாகனம் ஓட்டும் போது போன் பேச அனுமதி உண்டு:
இந்தியாவில் அதிக அளவில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று, வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே செல்போன் பேசுவது ஆகும். இதனால் ஓட்டுநர்களிடம் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இது போக்குவரத்து விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் இந்த போக்குவரத்து விதியில் இருந்து சில காரணங்களுக்காக விலக்கு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. எந்த ஒரு வாகனத்தின் ஓட்டுநராக இருந்தாலும், வழி கேட்பதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டலாம். வேறு எந்த காரணத்திற்காகவது செல்போன் பயன்படுத்தினால் கண்டிப்பாக ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அவசரகால வாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை:
எந்தவொரு அவசர சேவை வாகனத்திற்கும் வழி விட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் யாரேனும் அத்தகைய வாகனத்தின் பாதையைத் தடுப்பது அல்லது குறுக்கீடு செய்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அவசரகால வாகனங்களில் தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், போலீஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடங்கும்.
Also Read : Aadhaar Update | புவன் ஆதார் போர்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
தகுதியற்றவர் வாகனம் ஓட்டினால்:
குடிபோதையில் அல்லது வேறு ஏதாவது போதைப்பொருளை உட்கொண்டு விட்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் எந்தவொரு நபரும் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவராக இருந்தால், அப்படிப்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதை சட்டம் தடை செய்கிறது. மேலும், யாரேனும் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.