முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஷாட்கன் என்ற புதிய பெயரை பதிவு செய்து காப்புரிமை பெற்ற ராயல் என்ஃபீல்ட்!

ஷாட்கன் என்ற புதிய பெயரை பதிவு செய்து காப்புரிமை பெற்ற ராயல் என்ஃபீல்ட்!

ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட்

350 சிசி டூரர் மாடலானது ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் என்று இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை அடுத்து வரவிருக்கும் 650 சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கு ஷாட்கன் (Shotgun) என்ற பெயரிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :

டூரிங் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் 350 சிசி முதல் 650 சிசி வரையிலான புதிய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் புதிய தலைமுறை கிளாசிக் 350-ஐ (new generation Classic 350) அறிமுகப்படுத்த உள்ளது. இதை தொடர்ந்து புதிய 350 சிசி டூரர் (350cc Tourer) அறிமுகமாக உள்ளது. 350 சிசி டூரர் மாடலானது ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் என்று இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை அடுத்து வரவிருக்கும் 650 சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கு ஷாட்கன் (Shotgun) என்ற பெயரிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களில் ராயல் என்ஃபீல்ட் Flying Flea, Roadster, Hunter and Sherpa உள்ளிட்ட பல புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் Royal Enfield Shotgun என்ற பெயருக்கு அந்நிறுவனம் சமீபத்தில் காப்புரிமை பெற்றுள்ளது. நிறுவனம் தயாரித்து வரும் புதிய 650 சிசி க்ரூஸர் மோட்டார் சைக்கிளுக்கு ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் என்ற பெயர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்திய சாலைகளில் பல முறை சோதனைக்கு உட்பட்டது.

காடிவாடியின் (gaadiwaadi) ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, ராயல் என்ஃபீல்ட் இரண்டு 650 சிசி பைக்குகளை டெஸ்டிங் செய்து வருகிறது. இதில் ஒன்று லோ ஸ்லங் க்ரூஸர், மற்றொன்று வழக்கமான மோட்டார் சைக்கிள். இந்த 2 மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பெயர் ஷாட்கன் ஆக இருக்கக் கூடும். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் மிகவும் அதிநவீன டிரிப்பர் நேவிகேஷன் அம்சத்துடன்(tripper navigation feature) வந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் விலையை ஒப்பீட்டளவில் குறைவாக வைத்திருக்க, கான்டினென்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டரில் இருக்கும் கூறுகள் இதில் அடங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Also read... இந்திய கார் சந்தையில் நுழைந்த டெஸ்லா - மும்பையில் முதல் ஷோரூம்!

வரவிருக்கும் இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை தோராயமாக சுமார் ரூ .3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது, வரவிருக்கும் 650 திறனுடைய இருசக்கர வாகனங்களில் 648 சிசி, ஏர் / ஆயில் கூல்டு, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 இல் இருக்கும் இணை-இரட்டை இயந்திரம் (parallel-twin engine) இருக்கும் என்று தெரிகிறது. இந்த எஞ்சினின் உச்ச சக்தி 47.65 பிஎஸ் மற்றும் மேக்ஸிமம் ட்டார்க் (maximum torque) 52 என்எம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

மேலும் இந்த எஞ்சின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் இந்த வாகனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்து எந்த விவரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் தசரி கடந்த ஆண்டு Royal Enfield Meteor 350 பைக் வெளியீட்டின் போது பேசுகையில், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய பைக்கை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Royal enfield