புதிய பைக்குகளை களமிறக்கும் ராயல் என்ஃபீல்ட்

news18
Updated: August 25, 2018, 6:37 PM IST
புதிய பைக்குகளை களமிறக்கும் ராயல் என்ஃபீல்ட்
ராயல் என்ஃபீல்ட் லோகோ
news18
Updated: August 25, 2018, 6:37 PM IST
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆகஸ்ட் 28-ம் தேதி புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த  பைக்குகள் ஏ.பி.எஸ் வசதிகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய கிளாசிக் மாடல் பைக்குகளின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்தப் புதிய கிளாசிக் பைக்கின் வீல்கள், இன்ஜின், ஹெட்லைட்-மாஸ்க் மற்றும் சைலன்ஸர் என அனைத்தும் கருப்பு வண்ணங்களில் உள்ளன.இந்தப் புதிய பைக் கிளாசிக் 500-ஐ போல் சிங்கிள் சீட்டட் பைக்காக உள்ளது. இந்த பைக்கின் சீட்டுக்கு காக்கி நிற லெதர் கவர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கின் இன்ஜின் பழைய 350 சிசி, 500 சிசி போல் அல்லாமல் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல் இன்ஜினுடன் வெளிவருகிறது. இந்த 2 பைக்குகளும் 5 கியர்கள் கொண்டது.

இதுவரை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த 2 பைக்குகளும் லிமிட்டட் எடிஷனில் வெளிவருமா எனவும் இதுவரை தெரியவில்லை.
First published: August 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...