இந்திய இரு சக்கர வாகன சந்தையில் புல்லட் எனப்படும் ராயல் என்ஃபீல்ட் பைக்கிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. புல்லட் ஓட்டினாலு ஒரு கம்பீரம் தான். அப்படி வயது வித்தியாசமில்லாமல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ராயல் என்ஃபீல்ட் காலத்திற்கு ஏற்றவாறு புதுப் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ஆர்இ 650 அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பைக் ரூ.3,48,900-முதல் (ஷோரும் விலை) கிடைக்கிறது. மூன்று மாடல்களில் வெளியாகியுள்ள இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்
சோலோ டூரர் அஸ்ட்ரால் – ரூ.3,48,900(ஷோரும் விலை), சோலோ டூரர் இன்டர்செல்லர்- ரூ. 3,63,900(ஷோரும் விலை), கிராண்ட் டூரர் செலஸ்டியல் – ரூ. 3,78,900(ஷோரும் விலை). நவீன டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், டிரிப்பர் நேவிகேஷன்கள் என அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் இந்த பைக்குகளில் இருக்கிறது. மூன்று வண்ணங்களில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த பைக்குகள். 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட்மென்டுகளுடன் பின்னால் இரண்டு ஷாக்அப்சாபர்கள் உள்ளது. இதனால் நீண்ட துரம் சொகுசான பயணத்திற்கு இந்த பைக்குகள் உத்தரவாதம். 648 சிசி திறன் கொண்ட பேரலல் இரட்டை பிஸ்டன்கள் கொண்ட எஞ்சின் உறுதியான சக்தி மிகுந்த ஓட்டத்தை தருகிறது.vஇந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 hp திறனை வெளிப்படுத்தக் கூடியது. ஆறு கியர்கள் கொண்ட பைக்காக ஆர்இ650 வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகமான உடனேயே அனைவரது கவனத்தையும் இந்த பைக்குகள் ஈர்த்துள்ளன. இந்த பைக்குகளின் சோதனை ஓட்டத்தின் போதே எஞ்சின் தனது முழு திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. கண்ணைக் கவரும் வண்ணங்களில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள் கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களின் ஆகச் சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சத்தமில்லாமல் பல்வேறு புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்ட் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு உலகின் முதல் இரட்டை சிலிண்டர் ஹிமாலயன் டைப் பைக்காக ராயல் என்ஃபீல்ட் 822 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இரட்டை எஞ்சின்களுடன் அசத்தலாக அறிமுகமான ராயல் என்ஃபீல்ட் 822 பைக்கைப் பேலவே தற்போது வெளியாகியிருக்கும் ஆர்இ650 வேரியண்ட்டுகளும் விரைவில் இந்திய சாலைகளில் வலம் வரப்போகிறது. சர்வதேச பைக் தயாரிப்பாளர்களுடன் போட்டி போடும் அளவிற்கு இந்திய பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபல்ட்-டும் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile