ராயல் என்ஃபீல்டு ’500 சிசி’ மாடல்களின் விற்பனையை நிறுத்த முடிவு..!

ராயல் என்ஃபீல்டு ’500 சிசி’ மாடல்களின் விற்பனையை நிறுத்த முடிவு..!
ராயல் என்ஃபீல்டு 500 சிசி
  • News18
  • Last Updated: February 1, 2020, 7:57 AM IST
  • Share this:
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான 500 சிசி மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறது.

இது குறித்த செய்திகள் சமீப காலமாக பரவி வந்த நிலையில் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. புல்லட் 500, கிளாஸிக் 500, தண்டர் பேர்ட் 500 ஆகிய மாடல்கள் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் நீண்ட காலமாக அந்நிறுவனத்தில் பிரபலமாக இருந்து வந்த 500 சிசி மோட்டார் சைக்கிள்களை கொண்டாடும் விதமாக லிமிடெட் எடிஷன் கிளாஸிக் 500 ட்ரிபியூட் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு. பிப்ரவரி 10-ம் தேதியன்று மதியம் 2 மணிக்கு துவங்கும் ஆன்லைன் விற்பனை மூலம் மட்டுமே இந்த பைக்கை வாங்க முடியும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

  
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்