முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன் பைக்குகளின் டெலிவரி துவங்கியது - ராயல் என்ஃபீல்டு தகவல்

650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன் பைக்குகளின் டெலிவரி துவங்கியது - ராயல் என்ஃபீல்டு தகவல்

காட்சி படம்

காட்சி படம்

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கி இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

தனது 120-வது ஆண்டு அனிவர்சரி லிமிட்டட் எடிஷன்களான 650 ட்வின் மோட்டார் சைக்கிள்களை (Interceptor INT 650 & Continental GT 650), இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கி இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகளவில் 480 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும் ராயல் என்ஃபீல்டின் அனிவர்சரி எடிஷன் 650 ட்வின் மோட்டார் சைக்கிள்ஸ் கடந்த ஆண்டு EICMA 2021-ல் வெளியிடப்பட்டது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களும் நிறுவனத்தின் 120 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடுகின்றன. மேலும் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசியாவில் விற்பனைக்காக 480 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள. இதில் இந்தியாவிற்கு 120 யூனிட்கள் (இன்டர்செப்டார் 650- 60 யூனிட்கள் + கான்டினென்டல் ஜிடி 650 - 60 யூனிட்கள்) மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

தனது 650 ட்வின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் குறித்த அறிவிப்பை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இந்த 2 ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளுக்கு ஆன்லைன் ஃபிளாஷ் விற்பனை தொடங்கப்பட்டது. அப்போது 650 Twins Anniversary Edition-ன் 120 யூனிட்களை வெறும் 120 வினாடிகளில் அதாவது 2 நிமிடங்களில் விற்பனை செய்து புதிய சாதனை படைத்ததாக ராயல் என்ஃபீல்டு அப்போது அறிவித்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பைக் பிரியர்கள் காரணமாக இரண்டே நிமிடங்களில் விற்று தீர்ந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனை அடுத்து ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றதாக கூறி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெருமிதம் தெரிவித்திருந்தது.

also read : இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லை.. ஏன் தெரியுமா?

2 மோட்டார் சைக்கிள்களும் ஒரு தனித்துவமான கருப்பு-க்ரோம் கலர் ஸ்கீம்களை கொண்டுள்ளன. இந்த லிமிட்டட் எடிஷன் மோட்டார் சைக்கிள்கள், எரிபொருள் டேங்கில் பிரத்யேகமாக கையால் வடிவமைக்கப்பட்ட டை-காஸ்ட் பேட்ஜை பெற்றுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஃபிளைஸ்கிரீன்கள், என்ஜின் கார்டுகள், ஹீல் கார்டுகள், டூரிங் மற்றும் பார் எண்ட் மிரர்கள் போன்ற பல பாகங்கள் கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டின் இந்த 2 லிமிட்டட் எடிஷன் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை வாங்கி இருக்கும் சில பிரபலமான நபர்களில் இந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜி பைனுமூட்டில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் அடங்குவர்.

First published:

Tags: Bike, Royal enfield