Royal Enfield: ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ராயல் என்ஃபீல்டு-ன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம் ?

ராயல் என்ஃபீல்டு

இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் புதிய மாடல் பைக்குகள் வெளியாகவிருக்கிறது என ராயல் என்ஃபீல்டு-ன் சிஇஓ வினோத் கே தசரி தெரிவித்தார்.

  • Share this:
ராயல் என்ஃபீல்டு என்றாலே பைக் பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய காதல் உண்டு. இந்நிலையில் ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ராயல் என்ஃபீல்டு பைக் நிறுவனம் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்யவிருக்கிறதாம். அதில் மிக எதிர்பார்ப்பில் உள்ள மாடல்களும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

Eicher மோட்டார்ஸின் ஒரு பகுதியான இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் விரைவில் சந்தைக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் புதிய மாடல்கள் பைக்குகள் வெளியாகவிருக்கிறது என இந்நிறுவனத்தின் சிஇஓ வினோத் கே தசரி தெரிவித்தார். இனி ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் புதிய பைக்குகள் வரும் என உறுதியளித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை விரைவில் சரியாகும். அடுத்து வரும் மாதங்களில் சில பெரிய மாடல்கள் தொடர்ச்சியாக வரவிருக்கின்றன. இதுகுறித்து நாங்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். இதுகுறித்து எல்லா வித மார்க்கெட்டிங் முறைகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன என தசரி தெரிவித்தார்.

Also Read:   ஜகமே தந்திரம் ரிலீஸ்: தனுஷுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹாலிவுட் இயக்குனர்கள்!

உலக அளவிலான போட்டியை சமாளிக்க ராயல் என்ஃபீல்டானது புதிய மாடல்களின் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ சித்தார்த்தா லால் தெரிவித்துள்ளார். மேலும் வெளிவரவிருக்கிற ராயல் என்ஃபீல்டின் அனைத்து தயாரிப்புகளும் உலகத் தரத்தில் உருவாகி வருகிறது. எங்களின் தயாரிப்புகள் ஜெர்மன் மற்றும் ஜப்பான் தயாரிப்புகளுக்கு இணையாக இருக்கும். மேலும் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது, மேம்பட்ட தரமான பொருளாக இருப்பது ஆகியவை எங்களின் கனவு.

Also Read:   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜொலிக்கப்போவது இவர் தான் - சச்சின் கணித்த வீரர் யார்?

இது எங்களது கடந்த சில தயாரிப்புகளிலும் இடம் பெற்றிருக்கும் என நம்புகிறோம்.என்றார். மேலும் ராயல் என்ஃபீல்டின் தற்போதைய மாடல்களான Meteor, Inteceptor, Continental GT, Himalayan, Classic மற்றும் புல்லட் ஆகியவை விற்பனையில் உள்ளன. தற்போது புதிய வரவுகளை விற்பனை செய்வதற்கு பெரிய  கடைகள் , கடைகளின் வசதிக்கு ஏற்ப அனைத்து பகுதிகளுக்கும் பைக் விற்பனையை அதிகரிப்பதற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அவர்களது முக்கிய நோக்கம் சர்வதேச அளவில் விற்பனையை அதிகரிப்பதே என தசாரி தெரிவித்தார். தற்போது ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநகரம், நகரகப்பகுதிகளிலும் உள்ளது. மேலும் உலக அளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது
Published by:Arun
First published: