மீட்டியோர் 350 வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்திய நிறுவனம்: தற்போது விலை எவ்வளவு தெரியுமா?

மீட்டியோர் 350

புதிய விலைகளின்படி, மீட்டியோர் 350 இன் அடிப்படைப் வெர்ஷனான ஃபயர்பால்-ன் விலை ரூ.1,99,109 ஆக இருக்கும்.

  • Share this:
சென்னையை தலைமையிடமாக கொண்ட மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது மீட்டியோர் 350 வாகனத்தின் அனைத்து வேரியண்ட்டுகளின் விலைகளையும் மீண்டும் உயர்த்தியுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகமான மீட்டியோர் 350 மூன்று வேரியண்ட்டுகளில் அதாவது மூன்று வகைகளில் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 மாடல்களின் விலைகளையும் கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் உயர்த்தியது.

அதன்படி, ஒவ்வொரு வகை வாகனத்தையும் பொறுத்து அதன் விலை ரூ.9000 வரை உயர்ந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடங்கியவுடன் மீண்டும் அந்த வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனகங்களின் வேரியண்ட்டை பொறுத்து ரூ.7000 வரை விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய விலைகளின்படி, மீட்டியோர் 350 இன் அடிப்படைப் வெர்ஷனான ஃபயர்பால்-ன் விலை ரூ.1,99,109 ஆக இருக்கும்.

இதற்கு முன்பு இதன் விலை ரூ.1,92,109-ஆக இருந்தது. இதையடுத்து ஸ்டெல்லர் வெர்ஷன் என்று அழைக்கப்படும் நடுத்தர வேரியண்ட் இப்போது ரூ.2,04,527 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.1,98,099-ஆக இருந்தது. இதற்கடுத்ததாக உள்ள டாப்-எண்ட் வேரியன்ட்டான சூப்பர்நோவா-வின் விலை இப்போது ரூ.2,15,084-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இதன் விலை ரூ.2,08,084 - ஆக இருந்தது. இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் டாப்-எண்ட் க்ரோம் வேரியண்ட்டின் விலையோடு ஒத்திருக்கிறது.இருப்பினும், மீட்டியோர் 350 சூப்பர்நோவாவைப் போலல்லாமல், புதிய தலைமுறை கிளாசிக் 350 வாகனத்தில் சிங்கள் சேனல் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் ரியர் டிரம் பிரேக் உடன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு தனது மீட்டியோர் வாகனத்தின் விலையை தொடர்ந்து இரண்டாவது முறையாக உயர்த்தியதற்கான காரணத்தை இதுவரை குறிப்பிடவில்லை.இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக மவுசு இருப்பதால், மற்ற மாடல்களுடன் சேர்த்து, மீட்டியோர் 350 வாகனங்களின் விற்பனையும் சீராக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வாகனங்களின் விலை உயர்வு விற்பனையை மட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.சுமார் 10 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350, அதன் ஆரம்ப விலையில் இருந்து இப்போது ரூ. 25000 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு நிறுவனம் சார்ந்த குறிகாட்டிகள் இல்லை என்றாலும், இந்த அதிகரிப்பு பாதகமான சந்தை நிலைமை மற்றும் உயரும் உள்ளீட்டு செலவுகள் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மீட்டியோர் 350 மாடல் 6100 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 20 பி.எச்.பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: