Home /News /automobile /

Meteor 350 மாடலில் புதிதாக 3 கலர்களை அறிமுகப்படுத்தி உள்ள ராயல் என்ஃபீல்டு

Meteor 350 மாடலில் புதிதாக 3 கலர்களை அறிமுகப்படுத்தி உள்ள ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350-ல் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 (Meteor 350) பைக்கிற்கான கலர் ஆப்ஷன்களை அதிகரித்து, புதிதாக 3 கலர்களை சேர்த்து உள்ளது. ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கானது முதல் முறையாக 2020-ஆம் ஆண்டு நவம்பரில் ரூ.1.75 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமானதில் இருந்து இந்த பைக்கின் விற்பனை சதவீதம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

விலையை பொறுத்தவரை ராயல் என்ஃபீல்டு Meteor 350 Fireball-ன் விலை ரூ. 2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதேசமயம் ராயல் என்ஃபீல்டு Meteor 350 ஸ்டெல்லர் மாடல்கள் தற்போது ரூ.2.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ராயல் என்ஃபீல்டு சூப்பர்நோவா வேரியன்ட்களின் விலை ரூ.2.22 லட்சமாக உள்ளது. ராயல் என்ஃபீல்டு Meteor 350 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

Meteor 350 கிளாசிக் க்ரூஸர் ஸ்டைலிங் மற்றும் நவீன திறன் ஆகிய இரண்டையும் தருகிறது. ரைடர்களுக்கு இணையற்ற சவாரி அனுபவத்தை வழங்குகிறது. Meteor 350 நீண்ட தூரம் சவாரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நகரத்திற்குள் சவாரி செய்வதற்கும் சிறந்தது. இந்நிலையில் புதிய கலர் ஆப்ஷன்களை சேர்த்து உள்ளதன் மூலம் Meteor 350 மோட்டார் சைக்கிளுக்கான கலர் தேர்வுகளை விரிவுபடுத்தி உள்ளது ராயல் என்ஃபீல்டு.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350-ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலர் ஆப்ஷன்களில் ஃபயர்பால் ப்ளூ (Fireball Blue), ஃபயர்பால் மேட் கிரீன் (Fireball Matt Green) மற்றும் சூப்பர்நோவா ரெட் (Supernova Red) ஆகிய 3 புதிய கலர் ஆப்ஷன்கள் அடங்கும். ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 (Royal enfield meteor 350) பைக்கை வாங்க போகும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கலர் ஆப்ஷன்களை விரிவுபடுத்தி உள்ளதை பார்க்கும் போது, இந்திய சந்தையில் அதன் உறுதியான செயல்திறனுடன் நல்ல விற்பனை தொடரும் என்ற நிறுவனத்தின் நம்பிக்கை வெளிப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350-ல் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய ராயல் என்ஃபீல்டு நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், Meteor 350 பைக்கை அறிமுகப்படுத்தியது எங்கள் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவில் என்ட்ரி-லெவல் க்ரூஸர் பிரிவில் புதிய வரையறைகளை மீட்டியோர் 350 அமைத்துள்ளது.

Also read... எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு!

உலகவிலான மார்க்கெட்டிலும் இந்த மாடல் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. எனவே இந்த மாடலை புதிய வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க நினைக்கும் வகையில் Meteor 350-ல் புதிய அற்புத வண்ணங்களை சேர்த்துள்ளோம் என்றார்.

Meteor 350 பைக்கானது முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டது மற்றும் புதிய 349 cc சிங்கிள்சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 20.2 PS அதிகபட்ச ஆற்றலை வெளியிட உதவுகிறது மற்றும் 27 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. Meteor பைக்கிற்கு முக்கிய போட்டியாக இருப்பது Honda H'ness CB350 ஆகும். இது எட்டு வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Royal enfield

அடுத்த செய்தி